காயல்பட்டினத்தில் நேற்றிரவு 08.00 மணிக்குத் துவங்கி 09.20 மணி வரை இதமழை பெய்தது. பின்னர் இரவு 10.05 மணிக்கு மீண்டும் இதமழையாகத் துவங்கி, நள்ளிரவு 01.00 மணியளவில் கனமழையாக மாறி, அதிகாலை 06.30 மணி வரை தொடர்மழை பெய்துள்ளது.
இம்மழை காரணமாக, நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை நீர் தேக்கக் காட்சிகள் பின்வருமாறு:-
புறவழிச் சாலையில்...
ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில்...
புதுப்பள்ளி குறுக்குச் சாலையில்...
மருத்துவர் தெருவில்...
மின்வாரிய அலுவலகம் அருகில்...
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (தைக்கா பள்ளி) வளாகத்தில்...
1. Time for reserving water posted byRiyath (HongKong)[20 October 2012] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 22924
This is the time to save drinking water for summer time. We no need to depend on anyone if we store these wasting rain water in one place called lake, We no longer see any lake near by our town.. all lakes gone for lakhs :-(
Municipality should consider to build a pipeline for rain water to store some where or send to nearby Dams under roadways during upcoming tendors
2. Re:... posted byPMA MOHIADEEN (kayalpatnam)[20 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22925
பெரிய பள்ளி அருகில் நைனார்தெரு ,சதுக்கைதெரு இடைப்பட்ட ரோட்டிலதண்ணீர் தங்கி உள்ளது தங்கள் பார்வைக்கு தெரிய வில்லையா.
Moderator: விடுபட்ட இடங்களில் அடுத்தடுத்து படமெடுத்து வெளியிடப்படும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சில இடங்களில் படமெடுக்கச் சென்றபோது சொற்ப அளவுக்கே தண்ணீர் தேங்கியிருந்த காரணத்தால் அவ்விடங்களில் படமெடுக்கப்படவில்லை.
புதுப்பள்ளி வரை சென்று படம் எடுத்த நீங்கள் பைபாஸ் ரோட்டில் ரிசுவான் சங்கம் உள்ளே செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி உள்ளது தங்கள் பார்வைக்கு தெரிய வில்லையா...?
4. பாம்பறியும் பாம்பின் கால்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22944
ஓய்! உண்மையைச் சொல்லும் இந்த களத்தொகுப்பில் உதவிங்கிற உடான்ஸெல்லாம் வேண்டாம்! புகைப்படங்கள் எடுத்தவர் பெயரை தனியாக வெளியிடவும். அது யாருன்னு எங்களுக்கும் தெரிய வேண்டாமா? பாராட்டத்தான்யா...!
சமீப காலமாக வெளிவரும் அனைத்து செய்திகளின் புகைப்படங்களும் அற்புதம்! மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் உள்ளன. பொதுவாக மக்களுக்கு சென்றடையும் செய்திக்கு அதை முழுமையாக உள் வாங்கிக் கொண்டு அதற்கேற்ப புகைப்படங்களை வெளியிட்டால் மட்டுமே அச்செய்தி மக்களின் மனதில் பதியும்!
ஆக இந்த கை வந்த கலையை தன் கையில் வைத்திருக்கும் புன்னியவானின் புகைப்படம் இல்லாவிட்டலும் பரவாயில்லை! அவரது பெயரையாவது போடுங்கள்!
இந்தப்படங்களிலேல்லாம் மிகவும் அருமையிலும் அருமை நமதூர் "கடற்க்கரை" காட்சிதான் .அருமையான ஒரு இயற்கைக்காட்சி ! இயற்கையான இந்த கடற்கரையை சுகாதாரமாகவும்,சுத்தமாகவும் வைத்திருப்பதும் நம் அனைவரின் மீதும் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross