தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்றிரவு துவங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்துள்ளது.
காயல்பட்டினத்தில் நேற்றிரவு 08.00 மணிக்குத் துவங்கி 09.20 மணி வரை இதமழை பெய்தது. பின்னர் இரவு 10.05 மணிக்கு மீண்டும் இதமழையாகத் துவங்கி, நள்ளிரவு 01.00 மணியளவில் கனமழையாக மாறி, அதிகாலை 06.30 மணி வரை தொடர்மழை பெய்துள்ளது.
இம்மழை காரணமாக, நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
நேற்றிரவு முதல் பெய்த இந்த பலத்த மழையையடுத்து, இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார். |