தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ் - 94.92 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தப்புளிகள் கோரி விளம்பரம் நேற்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்டு, அத்திட்டங்கள் குறித்த முழு விபரம் இன்று - தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் மழை நீர் வாறுகால் பணிக்காக 48.69 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் விவரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் இந்த தொகை - 4,86,900 லட்சம் ரூபாய் என - ஈ-டெண்டர் இணையதளத்தில் (https://tntenders.gov.in) - டெண்டர் மதிப்பு (Tender Value) தகவலில், பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.8 ஆ, 48 ஆ? என்ற தலைப்பில் இது குறித்த செய்தியை காயல்பட்டணம்.காம் இன்று வெளியிட்டிருந்தது.
தற்போது ஈ-டெண்டர் இணையதளத்தில் (https://tntenders.gov.in) - இத்தவறு குறித்த அறிவிப்பு (Corrigendum) - காயல்பட்டினம் நகராட்சி சார்பாக - வெளியிடப்பட்டுள்ளது.
|