வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
நேற்று (17.10.2012) மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு, வானம் இருண்டது. மாலை 05.25 மணியளவில் அடர்த்தியான துளிகளுடன் பெய்த கனமழை இரவு 07.15 மணி வரை நீடித்தது. மீண்டு்ம் நேற்றிரவு 11.25 மணியளவில் தூறல் மழை துவங்கி, இன்று காலை 09.45 மணி வரை நீடித்தது. இம்மழை காரணமாக, நகரில் பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
காயல்பட்டினத்தில், நேற்று 65 மி.மி.-ம், இன்று 33 மி.மி.-ம் மழை அளவு பதிவானது. |