தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ் இவ்வாண்டு காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அக்டோபர் 5 அன்று நடந்த காயல்பட்டினம் நகரமன்றத்தின் அவசர கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - இப்பணிகள் குறித்த டெண்டர் அறிவிப்பு இன்றைய (அக்டோபர் 5) THE NEW INDIAN EXPRESS நாளிதழில் வெளியாகியுள்ளது.
விளம்பரத்தில் உள்ள தகவல்படி - 25 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான இப்பணிகளுக்கான டெண்டர் - இ-டெண்டர் முறையில் அக்டோபர் 30 வரை பெறப்படும். இதற்கான ஆவணங்கள் அக்டோபர் 16 முதல் http://municipality.tn.gov.in/tenders மற்றும் http://tntenders.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் இடம்பெற்றுள்ள பணிகள் - 45 தினங்கள் முதல் 90 தினங்களில் முடிக்கப்படவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross