Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:37:20 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9393
#KOTW9393
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 17, 2012
மத்திய அரசு குழுவில் டாக்டர் கிஸார் இடம் பெற்றுள்ளார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3333 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவில் அன்றாடும் உருவாகும் மருத்துவத்துறை கழிவுகளை (Bio-medical Waste) கையாள மத்திய அரசு - Bio-medical Waste (Management and Handling) Rules, 2011 - என்ற பெயரில் சட்டம் வகுத்துள்ளது. இதன் வரைவுசட்டம் - ஆகஸ்ட் 24, 2011 - அன்று வெளியிடப்பட்டது. அது குறித்து பொது மக்களின் கருத்தும் கோரப்பட்டு, தற்போது தொகுக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்ய - அக்டோபர் 5 அன்று 11 நபர் வல்லுனர்கள் குழு ஒன்று - மத்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறையால் - உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காயல்பட்டினத்தை சார்ந்த, சென்னையில் பணிபுரியும் குழந்தைகள் மருத்துவர் டாக்டர் டி. முஹம்மது கிஸார் இர்ஷாத் - இடம் பெற்றுள்ளார்.

இந்த குழுவின் முதல் கூட்டம் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ம் தேதிகளில் புது டெல்லியில் நடைபெறும்.








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [17 October 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22859

மப்ரூக். புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தம்பி Dr.கிஜார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

ரியாதில் இருந்து
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..வாழ்த்துக்கள் .....
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [17 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22860

வாழ்த்துக்கள் ..... டாக்டர் டி. முஹம்மது கிஸார் இர்ஷாத் .. தங்கள் மருத்துவ பணியும் , மக்கள் நல பணியும் செவ்வனே தொடரட்டும்.

சிலோன் பேன்சி காழி ,
ஜித்தாஹ் ,
சவுதி அரேபியா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by sulaiman (abudhabi) [17 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22862

அஸ்ஸலாமு அழைக்கும், சந்தோஷமான செய்தி.அல்ஹம்துலில்லாஹ், சகோதரர் ,டாக்டர் கிஸார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை சிறப்பான முறையில் செய்து முடிப்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...congratulations
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22863

CONGRATULATIONS DR KHIZAR IRSHAD. JUST BEFORE A WEEK YOU WERE KNOWN TO THE PEOPLE OF CHENNAI ONLY, AS A DOCTOR. BUT YOUR ESSAY ON THE EVILS OF HAJ PRIVATE TOUR OPERATORS BROUGHT YOU OUT OF THE FOUR WALLS OF YOUR OFFICE AND EXHIBITED THAT IN YOU THERE IS A DOCTOR AS WELL AS A SOCIAL WORKER. YOU TORCHED OTHERS TO SEE THE WRITING ON THE WALL.

NOW THAT YOU HAVE BEEN SELECTED TO THE FACT FINDING COMMITTEE, YOU HAVE THE RESPONSIBILITY OF FINDING THE TRUTH IN THAT FIELD AND REPORT TO THE GOVERNMENT THE ACTUAL POSITION AND GIVE A SUGGESTION TO ERADICATE AND IMPROVE THE MATTER.

GO AHEAD, WITH THE BLESSINGS OF ALLAH, YOU WILL SUCCEED IN YOUR ENDEAVOURS, AS LONG AS YOU ARE STRAIGHT FORWARD IN YOUR CAREER. BLESSED ARE THOSE PURE IN HEART. BEST WISHES,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [17 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22864

மாஷா அல்லாஹ். மச்சான் கிஜார், பெருமையாவும் இருக்கு, பொறாமையாவும் இருக்கு. இது விஷயத்துல பொறாமை படலாந்தானே!

நீ தகுதியுடையவன் மச்சான். உன்னுடைய சேவைகள் நீடித்து நிலைக்க அல்லாஹ் உனக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும், நிறைவான செல்வத்தையும் தருவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22865

சகோ. டாக்டர் கிஜார் அவர்களை பாராட்டி மகிழ்கிறேன். அல்ஹம்து லில்லாஹ்.

உன்னுடைய தொழில் பக்திக்கும், சமூக அக்கறைக்கும், இஸ்லாத்தின் மேல் உள்ள பற்றுக்கும், இன்னும் பல பல வெற்றிகளும், புகழும் வந்து சேரும். இன்ஷா அல்லாஹ்.

தொடரட்டும் உன்னுடைய நற்பணிகள்.

வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

அன்புடன்,

சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத்தலைவர்
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம்-சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Congratulations...
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [17 October 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 22869

அல்ஹம்துலில்லாஹ்

உங்கள் பணி மேலும் தொடர நல்வாழ்த்துக்கள் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...dr
posted by hylee (colombo) [17 October 2012]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22873

சேவை மனம் கொண்ட நல்ல மனிதர்.வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Tariq (Jeddah) [17 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22874

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் Dr .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [17 October 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22875

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>>>> டாக்டர் கிஜார் அவர்களுக்கு எங்களுடைய இதய பூர்வமான நல் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன் <<<<<<<<

அருமை தம்பி.டாக்டர் கிஜார் அவர்களின் நல்ல மனதுக்கும் / நம் ஊர் மக்கள் மேல் வைத்துள்ள பாசத்துக்கும் / அவருடைய டாக்டர் தொழிலுக்கும் கிடைத்ததுதான்......நம் மத்திய அரசால். நம் சகோதரர் . டாக்டர் கிஜார் அவர்களை கௌரவிக்க பட்டது.

தம்பி. டாக்டர் கிஜார் உன்னுடைய ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் வல்ல இறைவன் துணை நிர்பானாகவும் ஆமீன்.உன்னுடைய ஒவ்வொரு முன்னேற்றதிலும் நாங்களும் மாஷா அல்லாஹ் சந்தோசம் அடைந்து மனம் பூரிப்பு அடைகிறது. DR தம்பி உன்னால் நம் ஊருக்கும் பெருமை தான்.

வல்ல இறைவன் உன்னுடைய ஆயுளை சிறப்பாக்கி வைத்து......நீ வருகின்ற காலத்தில் நம் ஊர் மக்களுக்கு சேவை செய்வாய் என்கிற முழுமையான நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு.

DR தம்பி நீ உன்னுடைய ஒவ்வொரு கட்டுரைலும் நம் ஊர் மக்கள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளீர்கள். என்பதை நாங்கள்.தங்களின் எழுத்து வடிவம் மூலம் அறிந்து கொண்டோம்.

தம்பி டாக்டர் கிஜார் உன்னுடைய முன்னேற்றம் """ வான் அளவு """ உயர வேணும் என்பது தான் எங்களின் எண்ணமும் & துவாவும் கூட.........

DR தம்பி தங்களை தேடியே எல்லா பதவிகளும் தன்னால் வந்து சேரும் .....

குறிப்பு ;............ DR தம்பி இந்த பிசியான நேரத்திலும் மறக்காமல் நம் மக்களுக்கு தேவையான / ஆரோக்கியமான நல்ல கட்டுரைகளை தர வேண்டியது.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Cnash (Makkah ) [17 October 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22877

Very proud to hear Doctor!! Another milestone on your continuous feet!! May Allah grant you all success in your endeavors.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வாழ்த்துக்கள்
posted by umar rizwan jamali (singapore) [17 October 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22878

இறை அருள் நிறைந்து பொழியும் உயர்ந்த சேவை மருத்துவம். அந்த சேவைக்கு கிடைக்கும் உயர்வு மட்டிலடங்காதது. அதில் தங்களை பதித்துக்கொண்ட உங்கள் புகழ் ஓங்கி உயரட்டும். உடலில் உயிர் உள்ளவரை உங்கள் சேவை தொடரட்டும் உங்களை ஈன்றெடுத்த பெற்றோர்களின் பிரார்த்தனைகளுடன். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வாழ்த்துக்கள்
posted by MS MOHAMMED LEBBAI (DXB) [18 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22883

தன் முழு நேர மருத்துவ பணிகளுக்கிடயையும் ,,,, பொது நலக்காரியங்களில் தன்னை அர்பணித்து,,,, காலநேரம் பாராமல் மக்கள் பணியாற்றும் உமக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் நல்லருல்புரிவானாக!!!!!!!! ஆமீன்>>>>

உமது நல்லெண்ணத்திற்கு பதவியே தேடி நீ போகவேண்டாம்,,,, பதவி உம்மை தேடி வரும்,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by JAFFER ALI (ANGOLA -WEST AFRICA) [18 October 2012]
IP: 41.*.*.* Namibia | Comment Reference Number: 22891

Dear Mr.Kizhar,

Allaah will give all the health and wealth to succeed in your goal. Jaffer A li


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [18 October 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 22895

அஸ்ஸலாமு அழைக்கும்,

சந்தோஷமான செய்தி. அல்ஹம்துலில்லாஹ்,
சகோதரர் ,டாக்டர் கிஸார் தொடரட்டும் உங்கள் பனி..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. டாக்டர் சாருக்கு வாழ்த்துக்கள்!
posted by kavimagan (qatar) [19 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22908

மக்கள் நலம் காக்கும் மதிப்பிற்குரிய மருத்துவப் பெருந்தகை டாக்டர் கிஸார் காக்கா அவர்கள்,மக்கள் குறை தீர்க்கும் சமூக நலப் பணியையும் திறம்பட ஆற்றி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! மத்திய அரசு அமைத்துள்ள பதினோரு பேர் கொண்ட குழுவில்,டாக்டர் அவர்கள் ஒருவர் மாத்திரம்தான் நமது சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்கள். அதிலும் குறிப்பாக,இந்த மருத்துவ மாமணி நமதூரைச் சேர்ந்த நமது சொந்தம் என்பதில் பெருமையுடன் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். கிஸார் காக்கா அவர்களின் மருத்துவ மற்றும் சமூகப்பணி தொய்வின்றி தொடர்ந்திட, இரு கரமேந்தி இறைவனைப் பிரார்த்தித்து,வாழ்வாங்கு வாழ்ந்திட வாகுடன் வாழ்த்துகிறோம்.

என்றும் அன்புடன்,

SMH. முஹைதீன் தம்பி (குடாக்),
குடாக் புஹாரி மற்றும்
கவிமகன் அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Bio Medical Waste (BMW) Mgmt
posted by Salai.Mohamed Mohideen (USA) [19 October 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 22916

பெறப்பட்ட கருத்துக்களை வல்லுனர்கள் குழுவுடன் இணைந்து ஆய்வு செய்ய போகும் டாக்டர் கிஸார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
-------------------------
Just my thought on Bio Medical Waste (BMW) Mgmt:

மருத்துவக் கழிவுகளை குறிப்பிட்ட டிஸ்போசல் (autoclaves / containers / Bags) அல்லது பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளான்ட்களில் (ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பிளான்ட்கள் உள்ளனவா ?) வெப்பநிலைக்கு கொண்டு சென்று அழிப்பார்கள் அல்லது பூமிக்கடியில் குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் புதைப்பார்கள். ஆனால் இங்கு?

நமது அரசாங்க (அல்லது தானியார்) ஆஸ்பத்திரியை உள்ளே & வெளிப்பகுதியை ஒரு வலம் வாருங்கள். சிரிஞ்சுகள், பேண்டேஜ் / ரத்தம் தோய்ந்த / நோயாளிகள் (எச்.ஐ.வி?) பயன்படுத்தும் எச்சில் துணிகள் என பல்வேறு மருத்துவ கழிவுகளை காணலாம்.

1998 க்கு அப்புறம் (பதினான்கு வருடங்கள் கழித்து?) BMW தொடர்பான சட்டத்தினை விரிவாக்க மறுபறுசீலனை செய்கின்றோம் என்று நினைக்கின்றேன். ஆய்வு செய்வதோடு நில்லாமல் அதனை (தேவையான கடுமையுடன்) நடைமுறை படுத்தவும் சொல்லுங்கள்... இல்லையென்றால் இவைகளனைத்தும் வெறும் ரூல்ஸ் களாகவே உறங்கிக்கொண்டிருக்கும்.

" The defaulting hospitals/nursing homes etc. are liable to be penalised as per the provisions of Environment (Protection) Act, 1986 and other pollution control Acts. " --- பெனால்ட்டிக்கு மட்டும் 1986 ரூல்ஸ்? மத்திய சுற்றுச்சூழல் (மந்திரி ஜெயந்தி நடராஜன்?) அல்லது சம்பந்த பட்ட துறையினர், விதிமுறைகளை மீறுபவர்களின் ஹாஸ்பிட்டல் / கிளினிக் / பார்மசி/ மருந்து தயாரிக்கும் நிறுவன உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது கடுமையான பைன்- களை விதிக்க வேண்டும்.

மற்ற நாட்டு மருத்துவமனை அளவுக்கு நமது நாட்டின் ஹாஸ்ப்பிடல் தரம் இல்லா விட்டாலும் கூட பரவா இல்லை... குறைந்த பட்சம் குடலை பிரட்டும் மருத்துவ கழிவுகளை முறைப்படி டிஸ்போஸ் செய்து ஓரளவுக்கு சுத்தமாக வைத்தாலே போதும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by D shaik abbas faisal (kayalpatnam) [21 October 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 22961

சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோர் எனக்கேட்ட தாய்

என்ற வள்ளுவரில் குரலுக்கு ஏற்ப சகோதரர் அவர்களின் இந்த பேற்றினால் எனது பெற்றோர் மிகவும் பெருமை அடைந்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. டாக்டர் அவர்களின் உடன் பிறந்த சகோதரன் என்ற முறையில் நானும் மிகவும் பெருமை அடைகிறேன்.வல்ல ரஹ்மான் சகோதரர் அவர்களின் ஆயிளை நீளமாக்கி அவர் மென்மேலும் பல சேவைகள் செய்ய அருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Haddadh (Thrissur) [22 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22984

அல்ஹம்துளில்லாஹ்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by librarian/president ALS (kayalpatnam) [23 October 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 23023

அஸ்ஸலாமு அழைக்கும்

உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை நிபுணர் குழுவில் காயல் நகரைச்சார்ந்த டாக்டர் கிஜார் அவர்கள் தேர்வு செய்யப்பட்டசெய்தி அறிந்து மகிழ்கின்றோம் எங்கள் தாயும்பள்ளி ஜமாத்துக்கு பெருமையாக உள்ளது, அதனால் வாழ்த்தி 'துவா' கேட்டு மகிழ்கின்றோம் இவரால் காயல் நகருக்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது டாக்டர் அவர்கள் இன்னும் பல துறைகளிலும் வெற்றி பெற்று சாதனைகள் பல புரிய எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாக ஆமீன்.

நூலகர்/தலைவர் ALS,
செயலாளர் ஜப்பான் முஹம்மது மொஹிதீன்
மற்றும்
அமைப்பாளர்கள் & உறுப்பினர்கள்,
சீதக்காதி நினைவு நூலகம் மற்றும் மஜ்லிசுள் கௌத் சங்கம்,
தாயும்பள்ளி வளாகம், காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved