தமிழக அரசு - காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள IUDM திட்டப்பணிகளுக்கான டெண்டர் இன்று THE NEW INDIAN EXPRESS நாளிதழில் வெளியானது. அக்டோபர் 10 அன்று தயார் செய்யப்பட்டதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்பு இன்று (அக்டோபர் 17) - தான் பத்திரிக்கையில் வெளியானது. மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளின் IUDM விளம்பரங்களும் THE NEW INDIAN EXPRESS நாளிதழில் தான் தினமும் வெளியாகிவருகிறது. காயல்பட்டினம் நகராட்சியின் விளம்பரத்திற்கு இடம் கிடைக்காமல் போகியிருக்கலாம்.
டெண்டர் விளம்பரத்தில் - பணிகளின் மதிப்பு 25 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணிகளின் விபரம் குறிப்பிடப்படவில்லை. முழு விபரமும் விளம்பரத்தில் வெளியிடப்பட்டால் - விளம்பரத்தின் அளவு பெரிதாக இருக்கும் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.
டெண்டர் குறித்த முழு விபரத்தை அக்டோபர் 16 (நேற்று) முதல் http://municipality.tn.gov.in/tenders மற்றும் http://tntenders.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விளம்பரம் வெளியாகியுள்ள இன்றைய தேதி வரை - அந்த இரு இணையதளங்களிலும் - டெண்டர் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொதுவான இ-டெண்டர் இணையதளம் (tntenders.tn.gov.in) ...
ஏப்ரல் மாதம் - காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்ட 2011-12 ஆண்டுக்கான திடக்கழிவு மேலாண்மை IUDM பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பிலும் இது போன்ற பிரச்சனைகள் நிகழ்ந்து - ஏப்ரல் 10 திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டெண்டர், பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக மே 23 அன்று திறக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
சிகப்பு நாடா (RED TAPISM ) என்பது அரசு அலுவல்களில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் சுட்டிக்காட்டுவதில் தவறும் இல்லைதான்.
ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜமுங்கோ !!!
மக்களே! மக்களின் மக்களே!!
இப்போதுதான் ஏதோ சமாதானமாக ஒரு சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டு நகராட்சி இயங்கத்தொடங்கியுள்ளதாக அறிகிறோம், இந்த பதிவின் மூலம் சம்பந்தமில்லாத கமெண்ட்ஸ் களை எழுதி குதூகலமாக இருக்கும் நகராட்சியை கூவி கும்மி அடித்துவிடவேண்டாமே.!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross