எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நியாயவிலைக் கடைகளில் வேஷ்டி - சேலை இலவச வினியோகம் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள நியாயவிலைக் கடைகளிலும் வேஷ்டி - சேலை இலவச வினியோகம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செல்கின்றனர்.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் - குருவித்துறைப் பள்ளி வளாகத்திலுள்ள நியாயவிலைக் கடையில், இலவச வேஷ்டி - சேலைகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சி:-
காயல்பட்டினம் புறவழிச்சாலையிலுள்ள கடையில், காயல்பட்டினம் நகர்மன்ற 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி - சேலைகளை வழங்கிய காட்சி:-
1. Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[18 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22894
இலவச சேலை வேட்டி வேணாம், ஏதாவது நல்ல வேலை வெட்டி இருந்தா தாங்க என்று எப்போது இந்த மக்கள் கேட்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது தான் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்ற அர்த்தம். அப்போதுதான் மக்களும் உழைத்து உண்ண வேண்டும் என்ற உன்னத நோக்கம் நிறைவேறும். நாட்டில் உற்பத்தி பெருகும்.வேலை இல்லா திண்டாட்டம் நிற்கும். அதுவரை இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் அரசியல் வாதிகள் பிழைப்பு நன்றாக நடக்கும்.
சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.....,உழைத்து வாழ வேண்டும் ...பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே....... .
அரசாங்கம் அனைவர்க்கும் பொதுவானவை. பொதுமக்களுக்கு கொடுக்கும் பொருட்களை வாங்குவதில் தவறில்லை. இதே நமது பண்டிகை காலங்களை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்களை பிற சமுதாய மக்களும் வாங்கி செல்வதை பார்க்கிறோம்., இந்த இலவச சேலைகளை நமது சகோதரிகள் தொழுகைக்கு பயன்படுத்தும் சேலையாக பயன் படுத்துவதை பார்த்து இருக்கிறோம்.
7. தீபாவளி தள்ளுபடி விலை 750 ரூபாய்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[19 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22905
தீபாவளி யாருக்கு ? இந்த உதவிகளை நம் சமுதாயத்தினர் வாங்குவது நியாயமா ? என்ற இந்த மாதிரி கேள்விகளை எழுப்பும் நபர்கள் தீபாவளி தள்ளுபடி விற்பனை சலுகைகளை எந்த கடையிலும் எந்த பொருளும் வாங்கி அணியக்கூடாது...! அனுபவிக்கவும் கூடாது...! தாங்களின் வாழ்நாளில் இதுவரை எந்த விழாவிலும் தள்ளுபடி சாமான்கள் வாங்கவில்லையா...?
உதாரணம் ஒரு பொருளின் விலை சாதாரண நாளில்1000 ரூபாய் என்றால்... 25 சதவீதம் தீபாவளி தள்ளுபடி விலை 750 ரூபாய்.. இக்கேள்வியை எழுப்பும் நபர்கள் அந்த பொருளுக்கு விலை 1000 ரூபாய் கொடுத்து தான் அந்த பொருளை கடையில் வாங்கி அனுபவிக்க வேண்டும்... ! இந்த மாதிரி நபர்கள் புரிந்தால் சரி...
8. Re:... posted byIbrahim Ibn Nowshad (Bangalore)[19 October 2012] IP: 220.*.*.* India | Comment Reference Number: 22910
Neutral Comment
Agreed with Mackie NoohuThambi.
இலவச டீவி கலைஞர் கொடுத்தார்.
இலவச அரிசி/மானிய அரிசி இருவரும் கொடுத்தார்கள்.
மருத்துவ காப்பீட்டு திட்டம் கொடுத்ததை மாற்றி கொடுத்தார் அம்மா.
இன்னும் இதர வீட்டு உபயோக பொருட்கள் இருவரும் கொடுத்தார்கள்.
ஆக மொத்தத்தில் இருவரும் இலவசங்களை மக்களுக்கு என்று அள்ளி தெளித்து, நம்மை சோம்பேறிகளாக மாற்றி, வீட்டில் இருந்து டீவி பாருங்கள், போர் அடித்தால் டாஸ்மாக்கு வாருங்கள். நோய் வந்தால் காப்பிட்டு திட்டத்தை பயன்படுத்துங்கள். இப்படி மக்களை அடிமையாக்கி உள்ளார்கள்.
என்ன அம்மா கொஞ்சம் ஓவரா பொய் Fuse அப்ப அப்ப எடுத்துவிடுகிறார்கள்.
9. இலவசங்கள் என்ற சிறிய மீனும் விலைவாசி உயர்வு என்ற பெரிய திமிங்கலமும் !! posted bySalai.Mohamed Mohideen (USA)[19 October 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 22912
நமது நாட்டில் தலைவிரித்தாடும் விலைவாசி உயர்வை பார்க்கும் போது எவ்வித இலவசங்களையும் வாங்கும் நிலையில் தான் நம் மக்கள் உள்ளனர். சமுதாயம், ஏழை பணக்காரன் என்ற பாரபட்சமெல்லாம் இதில் இல்லை. வசதியுள்ளவர்கள் வாங்கி அதனை தன் வீட்டில் பணி புரியும் வேலையாட்களுக்கு ஹஜ் பெருநாள் சேலையாக / வேஷ்டியாக (நமதூரில் வழமையில் உள்ளது தானே) கொடுப்பதட்க்கு வசதியாகவும் ஆகி விட்டது. இல்லையென்றால் அதற்க்கு ஒரு காசு செலவு பன்னனும்லே... பெண்களின் பெருமூச்சு !!
அரசியல்வா (வியா) திகள் எப்பொழுதுமே மக்களை மேம்படுத்த முனைவதே இல்லை. மக்களை முன்னேற்றாமல் / முன்னேற விடாமல் சோம்பேரிகளாகவே வைத்து அரசியல் நடத்தவே இவைகளைனைத்தையும் செய்கின்றனர்... அப்பொழுதுதான் தான் அவர்களும் ஆதாயம் அடைய முடியும். இலவசங்கள் என்ற சிறிய மீனை கண்ணில் காட்டி "விலைவாசி உயர்வு" என்ற பெரிய திமிங்கலத்தை அப்பாவி மக்களின் முதுகில் ஏற்றி விடுகின்றனர். என்று நம் மக்கள் இதனை உணரப்போகின்றார்கள் ... இல்லை நம் அரசியவாதிகள் உணர விட்டுவிடுவார்களா என்ன??
மக்களனைவரும் படித்து சிந்திக்கும் காலம் வரும் வரை நமது நாட்டின் தலையெழுத்தை மாற்றுவது கடினம் !!
10. Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[20 October 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 22917
தமிழா ,
தள்ளுபடி என்றாலும் , அங்கே இலவசம் இல்லை . காசு கொடுத்தால்தான் " தள்ளுபடி " யை தள்ளிக்கொண்டு வரமுடியும் . மேலும் தள்ளுபடியின் ரகசியத்தை அறியாமல் பேசுகிறீர் . ஒரு பொருளின் விலையை ஏற்றிவிட்டு , பிறகு ஏற்றியதை தள்ளுபடி என்று அறிவித்து , மக்களை தள்ளாட வைக்கிறார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross