காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் கல்விக்குழு ஏற்பாட்டில் இவரை போல் நீங்களும் சாதிக்க வேண்டும்! என்ற நிகழ்ச்சி அக்டோபர் 26 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 3:30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவை சார்ந்த முஹம்மது இப்ராகிம் கலந்துக்கொள்ள உள்ளார். எல்.கே. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுலைமான் பிளாக் உள்ளரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
<> முஹம்மது இப்ராஹீம், முன்னாள் சென்ட்ரல் பள்ளிக்கூட மாணவர்
<> 1992 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு (SSLC) அரசு பொது தேர்வில் நகரளவில் முதல் இடம் பிடித்தவர்
<> பொறியியல் (B.E.) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக ரேங்க் பெற்றவர் [Sathak Engineering College]
<> பொறியியல் முதுகலை (M.E.) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றவர் (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY [NIT] - TRICHY)
<> 20 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் (Patents) இவர் பெயரில் உள்ளது
<> அவர் எழுதிய ஒரு பாகம் (Chapter) பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ளது
<> ஆறு தேசிய / சர்வதேச ஆராய்ச்சி புத்தகங்களில் இவரின் படைப்பு வெளியாகியுள்ளது
<> பல கல்லூரிகளில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டுள்ளார்
<> கண்டுபிடிப்புகளுக்கும், சிறந்த பணிக்கும் பல விருதுகளை பெற்றுள்ளார்
<> Bharat Electronics Limited என்ற இந்திய அரசாங்க நிறுவனத்தில் ஓர் ஆண்டு பணிப்புரிந்த பின், 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிறுவனமான Honeywell நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்
<> Research Manager – ஆக தற்போது பணிப்புரியும் இவர், Ph.D பட்டம் பெற்ற பல விஞ்ஞானிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள மாணவர், மாணவியர், பெற்றோர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) கல்விக்குழு (education@kcgc.in) செய்து வருகிறது. இக்ரா கல்வி சங்கம் (iqrakpm@gmail.com) நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறது.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரம் பெற KCGC நகர ஒருங்கிணைப்பாளர் N.S.E. மஹ்மூதை தொடர்பு (+91 97863 42923) கொள்ளலாம்.
தகவல்:
கல்விக்குழு,
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC). |