காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா 17.10.2012 புதன்கிழமையன்று நடைபெற்றது. பள்ளி மாணவரின் கிராஅத்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் அமைப்பாளர் ஆ.சங்கர், குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தைத் துவக்கி வைத்து, அதன் சிறப்பம்சங்களை மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார்.
துவக்கமாக இம்மன்றத்தில் சுமார் 50 மாணவர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இறுதியாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் பி.ஆனந்தக் கூத்தன் நன்றி கூறினார்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ,
ஆசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |