காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மதியம் 12:05 மணி அளவில் துவங்கியது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமை தாங்கினார். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாத சாதாரண கூட்டங்கள் - தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்ததால், இன்றைய சாதாரண கூட்டத்தில் 50 பொருட்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் மாதம் - ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டிய - சாதாரண கூட்டம் நடைபெறவில்லை.
மதியம் 2:30 மணி அளவில் 27 பொருட்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டிருந்ததால், உணவு இடைவேளைக்கு பிறகு - மாலை 4 மணிக்கு கூட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகர் மன்ற சாதாரண கூட்டமும் எந்த ஒரு இடையுறும் இன்றி சிறப்பான முறையில் நடந்து ..நம் ஊருக்கான அனைத்து திட்டங்களும் .....நிறை வேட்ட பட வேணும் என்பது தான் நம் எல்லோர்களுடைய எண்ணமும் ....விறுப்பமும் கூட.......இன்ஷா அல்லாஹ். நல்லதே நடக்கும்.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross