காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நாளை (அக்டோபர் 22) காலை 11 மணி அளவில் - நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் கடந்த மூன்று சாதாரண கூட்டங்கள் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) - தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் முடிவுற்றன என்பது நினைவிருக்கலாம். செப்டம்பர் மாதம் - ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டிய - சாதாரண கூட்டம் நடைபெறவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அன்று - தமிழக அரசின் IUDM திட்டம் மூலம் நகராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் உட்பட சில முக்கிய பொருட்களுக்காக - அவசர கூட்டம் நடைபெற்று, தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நாளை நடைபெறவுள்ள கூட்ட அஜெண்டாவில் புதிதாக எந்த பொருளும் இணைக்கப்படவில்லை என்றும், முந்தைய மூன்று கூட்டங்களில் இடம்பெற்றப் பொருட்களே இணைக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
2. Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[22 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22965
இன்றைய கூட்டத்தில் தயவு செய்து தெரு விளக்குகள் நேரம் தவறி எரிவதும். அறவே எரியாமல் பல தெருக்களில் இருப்பது பற்றியும் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் அவசரமாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த இணைய தளத்தின் ஆசிரியர் வற்புறுத்தி பேசும்படி வேண்டிக்கொள்கிறேன்.
குறிப்பாக எங்கள் 16 வது வார்டு உறுப்பினரிடமும் தலைவியிடமும் போனில் தகவல் கொடுத்தபடி புதுக்கடை தெரு மெயின் ரோடு லைட் சுமார் 25 நாட்களாக எரியவில்லை. மக்கள் போக வர மிகவும் சிரமப்படுகிறார்கள். உடன் கவனிக்க சொல்லுங்கள்.கொள்ளை வழிப்பறி நடக்கவும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்று பயமாக இருக்கிறது. ஆவன செய்யுங்கள். நன்றி.
3. நமது தவறுகள் தான் நம்மை ஆளுகின்றன posted bySalai Sheikh Saleem (Dubai)[22 October 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22973
மக்கி காக்கா, நீங்கள் பதிவு செய்த வேண்டுகோள்கள் அத்தனையும் தேவையானவைகள் தான். ஆனால் இதை உங்கள் வார்டு கவுன்சில் உறுப்பினரிடம் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்து அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவரை தேர்ந்தெடுத்த எல்லோரும் அவரை முற்றுகை இட்டு கேள்விக்கணைகளை தொடுத்திருந்தால், அவர்களுக்கும் ஒரு பயம் இருந்திருக்கும். நாம் தான் அதை செய்வதே இல்லையே.
நமக்கு வேண்டிய காரியங்கள் எப்படியாவது நடக்க வேண்டும் என்று தானே எல்லோரும் நினைத்துக்கொண்டு காசுகொடுத்து காரியங்களை சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது எப்படி வரும் பயம் ? பொறுப்புணர்ச்சி ???
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross