காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண
கூட்டம் இன்று மதியம் 12:05 மணி அளவில் துவங்கியது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமை தாங்கினார். மதியம்
2:30 மணி அளவில் 27 பொருட்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டிருந்ததால், உணவு இடைவேளைக்கு பிறகு - மாலை 4 மணிக்கு கூட்டம் தொடரும்
என அறிவிக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பிறகு - மீண்டும் 5 மணி அளவில் கூட்டம் கூடியது. எஞ்சிய 23 பொருட்களும் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களும்
நிறைவேற்றப்பட்டு - மாலை 7:15 அளவில் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாத
சாதாரண கூட்டங்கள் - தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்ததால், இன்றைய சாதாரண கூட்டத்தில் 50 பொருட்கள் விவாதத்திற்கு
வைக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் மாதம் - ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டிய - சாதாரண கூட்டம் நடைபெறவில்லை.
இக்கூட்டம் குறித்து முழு விபரம் விரைவில் வெளியிடப்படும்.
|