இன்று மாலையில் குத்துக்கல் தெரு - ஃபாயிஸீன் சங்க முனையில் விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டு மந்தையில் பொதுமக்கள் ஆடுகளை கொள்முதல் செய்து சென்றனர்.
ஒரு ஆட்டுக் கிடா ரூ.6,500இல் துவங்கி, ரூ.9,000 வரை விலை பேசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. ஹஜ்ஜுப்பெருநாள்..அதுவே தியாகத் திருநாள்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[24 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23043
வல்லோனின் கட்டளைக்கு கீழ் படிந்து ஏழை எளியவர் மற்றும் தாமும் உண்டு மகிழ இச் செயலை காசு பணம் பார்க்காமல் கருமிதனம் செய்யாமல் காலா காலங்களாக கடைபிடித்து வரும் இஸ்லாமிய பெருமக்களின் இந்த ஈகை குணத்திற்கு ஈடு இணைதான் ஏது?
ஆடு, மாடு, ஒட்டகம் என்பதை வெறும் காட்சிப் பொருளாகவே பார்க்கும் ஏழைகளுக்கு இந்த தியாகத் திருநாள் வயிறு நிறைய உண்ணும் வாய்ப்பை அளித்து வருவது பெருமையாக உள்ளது.
உலகளாவிய இஸ்லாமிய பெருமக்களோடு நம் காயல்ர்களும் “குர்பான்” (உளுஹ்ஹியா) கொடுக்க மிகுந்த ஆர்வமுடன் வருடா வருடம் எண்ணிக்கையில் கூடிவருவதும் பெருமையாகவே உள்ளது.
எல்லாம் வல்ல நாயன் என்ன நோக்கத்திற்காக இவர்கள் கொடுக்கிறனரோ? அந்த நல்ல நோக்கத்தை அங்கீகரித்து அதற்குரிய மகத்தான நற்கூலியை இம்மையிலும் நாளை மறுமையிலும் வழங்கியருள்வானாக...! ஆமீன்.
3. Re:...கிடா, மாடு posted byNIZAR AL (kayalpatnam)[25 October 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23044
வாங்க, வாங்க என்று எதோ அள்ளி கொடுப்பது போல் செய்தியாளர் அழைத்து சென்றார், செய்தி படித்த பிறகு தான் தெரியவந்தது உல்ஹியா கிடா பாயிசீன் சங்கம் அருகே விட்கபடுகிறது என்று,
வழமையாக கூலக்கடை பஜார், கடைபள்ளி அருகே தான் விற்பனை நடக்கும், சில பேர் இன்னும் காணமே என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் கிழக்கு பகுதி வரும் என நினைக்கிறேன்.
3500 முதல் 5000 வரை இருந்த கிடாக்கள் இன்று 6000 முதல் 9000 வரை விலை எகுறி இருக்கிறது.
மாடுகள் 12000 மேல்தான், எப்படியோ மக்கள் கடமை நிறைவேற்ற வாங்குகிறார்கள்,இறைவன் இதற்கான நிறைந்த கூலியை நம் மக்களுக்கு கொடுப்பானாக ஆமீன்.
4. Re:...இறைச்சியோ இரத்தமோ... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23048
இந்த தியாகத்திரு நாள் நேரம் நாம் ஒன்றை நினைக்க கடமைபட்டிருக்கிறோம். மிருகங்களின் இறைச்சியோ அதன் இரத்தமோ நம்மை வந்தடைவதில்லை. மாறாக நாம் இட்ட கட்டளையை நமக்காக நிறைவேற்றுபவர் யார் என்று அவர்கள் உள்ளங்களை சோதிப்பதற்காகவே இந்த குர்பான் நிகழ்ச்சியை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான் என்று அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள்.
கிடாய் கொடுக்க வசதி உள்ளவர்கள் அதை கொடுப்பதே சிறப்பு. ஆனால் என்ன வசதிகள் இருந்தாலும் மாட்டில் ஒட்டகத்தில் ஏழில் ஒரு பங்கு சேர்வதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மாட்டுக்கறியை ஏழைகளுக்கு உற்றார் உறவினர்களுக்கு பங்கு வைக்கும்போது. "மாட்டுக்கறி தானாக்கும் , எங்களுக்கு வேண்டாம். கால் எல்லாம் உளைகிறது. வேறு யாருக்கும் கொடுங்கள்" என்று அவர்கள் சலித்துக் கொள்வதை சர்வ சாதாரணமாக காண முடிகிறது. அப்படி அவர்கள் விரும்பாததை அவர்கள் தலையில் கட்டுவதை இஸ்லாம் விரும்பவில்லை. இந்த நிலையில் அந்த கறியை என்ன செய்வது என்று புரியவில்லை.
மாற்று மத சகோதரர்களுக்கும் கொடுக்க மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். எனவே இந்த பிரச்சினை தீர்வதற்கு, நமது குர்பான் கறிகள் பிரயோஜனமாக அமைவதற்கு நாம் என்ன செய்யலாம் என்று ஒரு மாற்று வழியை உலமாக்கள் ஆய்ந்து அறிந்து மக்களுக்கு அறிக்கை தந்தால் நல்லது.
அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. அல்லாஹ் நம் எல்லோருடைய குர்பான்களையும் நாம் அல்லாஹ்வின் திருபொருத்தத்தை மட்டுமே நாடி நிறைவேற்றியவர்கள் கூட்டத்தில் சேர்த்து வைத்து அதன் நற்கூலியை நாளை மறுமையில் நிரப்பமாக தந்தருள் புரிவானாக . ஆமீன்.. ஈத் முபாரக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross