இம்மாதம் 29ஆம் தேதியன்று காயல்பட்டினம் வருகை தரும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வரவேற்பளிப்பதென்றும், அன்று மாலையில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவதென்றும் அக்கட்சியின் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டம் 21.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில் நகரத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.இ.அஹ்மத் தம்பி, ஹாஜி எம்.அஹ்மத் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
எதிர்வரும் 29.10.2012 திங்கட்கிழமையன்று காலை 09.30 மணியளவில், மணிச்சுடர் நாளேட்டில் பணியாற்றிய திரு.பி.ரத்தினசிங் அவர்களின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செந்தூர் விரைவுத் தொடர் வண்டியில் வருகை தரவிருக்கும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும்,
அன்று மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவதென்றும் இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அவர்கள் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், அப்துல் பாஸித், எச்.எம்.மஹ்மூத் ஜிஃப்ரீ, மா.மு.மொகுதூம் கண் ஸாஹிப், பி.எம்.ஏ.சி.ஷேக் நூருத்தீன், எம்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஏ.சுல்தான், பிரபு செய்யித் அஹ்மத், எம்.இசட்.சித்தீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.K.முஹம்மத் இம்ரான் |