இம்மாதம் 25ஆம் தேதி வியாழக்கிழமையன்று (இன்று) அரஃபா தினம் என்றும், 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) ஹஜ் பெருநாள் என்றும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்று நோன்பு நோற்றவர்கள், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறந்தனர்.
இந்நிலையில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் சார்பில் பெருநாள் தொழுகை குறித்து பின்வருமாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது:-
26.10.2012 வெள்ளிக்கிழமையன்று காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பா பேருரையும் நடைபெறும். அனைவரும் குறித்த நேரத்தில் தொழுகையில் பங்கேற்க வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். தொழுகைக்கு வருவோர் தொழுகை விரிப்புகளையும் கையோடு கொண்டு வந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
ஒருவேளை நாளை பெருநாள் தொழுகை நேரத்தில் மழை பெய்தால், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |