25.10.2012 வியாழக்கிழமையன்று (நேற்று) அரஃபா தினம் என்றும், 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று (இன்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்த, அதனைத் தொடர்ந்து - அப்பள்ளியின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இத்தொழுகையில், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அதன் நிர்வாகிகளான ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், செயலாளர் வழக்குறைஞர் எம்.ஐ.மீராஸாஹிப், நிர்வாகிகளான ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், அப்பாபள்ளி தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., சிங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர் துணி அன்ஸாரீ, தம்மாம் காயல் நற்பணி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ உட்பட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் அவர்கள் குழுக்குழுவாக இணைந்து தமக்கிடையில் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
ஷமீமுல் இஸ்லாம் (SKS)
Netcom புகாரீ |