Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:36:23 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9473
#KOTW9473
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 26, 2012
உள்ஹிய்யா 1433: நகர பள்ளிவாசல்களில் மாடுகள் குவிப்பு! ஒட்டகங்கள் ஊர்வலம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3542 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.

ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.

அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

காயல்பட்டினம் ஜாவியா, ஐ.ஐ.எம். (குட்டியாபள்ளி), புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மரைக்கார் பள்ளி, குருவித்துறைப் பள்ளி, காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும், பொதுநல அமைப்புகளிலும் உள்ஹிய்யா நிறைவேற்றத்திற்காக மாடுகள் குவிக்கப்பட்டுள்ளது.







இது தவிர, காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் உள்ஹிய்யாவிற்காக ஒட்டகமும் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நகர்வலத்தைத் துவக்கி இந்த ஒட்டகம், சிறிய குத்பா பள்ளியின் இன்று மதியம் ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற நேரத்தில் அவ்வழியே வந்தது. அதனையடுத்து, ஒட்டகத்தைக் காண பெருங்கூட்டம் கூடியது.







ஏரல் நகரில் உள்ஹிய்யாவிற்காக வரவழைக்கப்பட்டுள்ள ஒட்டகம், நேற்று காயல்பட்டினத்தில் நகர்வலம் சென்றது. ஆங்காங்கே தெருக்களிலுள்ள பொதுமக்கள் தம் இல்லக் குழந்தைகளை ஒட்டகத்தில் ஏற்றி, இலவச சவாரி செய்யச் செய்து மகிழ்ந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [26 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23102

தற்போது ஒட்டகம் குர்பான் கொடுப்பது ஒரு விளம்பரமாக ஆகிவிட்டது. தெரு தெருவாக ஊர்வலம். போதாது என்று ஏரல் நகரில் உள்ஹிய்யாவிற்காக கொண்டுவந்த ஒட்டகமும் காயலுக்கு விஜயம். கொடுமையப்பா..

நன்றாக போய்விட்டது, வல்ல ரஹ்மான் யானையை உள்ஹிய்யா கொடுக்க சொல்லாமல் விட்டானே...!! தப்பியது காயல்...!!

வங்காளம் உமர் காக்கா, உங்களை கத்தாரில் தேடினால் காயலில் மெலிந்த ஒட்டகத்தை பிடித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். இரண்டு இடத்திலும் ஒரே ஜாப்தானோ..?

வல்ல ரஹ்மான் நம் உள்ளத் தூய்மையான அமல்களை அங்கீகரிப்பானாக.

சாளை S.I. ஜியாவுத்தீன். அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by salai s nawas (kayalpattinam) [26 October 2012]
IP: 219.*.*.* India | Comment Reference Number: 23109

இன்று ஒட்டகம் உன்னை சுமந்தது !
நாளை நீ ஒட்டகத்தை சுமக்க போகிறாய் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (Nhon trach , Vietnam) [26 October 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 23118

அஸ்ஸலாமு அழைக்கும் ஜியா பாய் . புகைப்படங்களில் ஒட்டகத்தை பார்த்த குழந்தைகளுக்கு , அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு . சும்மா எதையாவது சொல்லி கெடுத்து விட்டுடாதீங்கோ ! ஹிஹிஹி

, நகரில் உள்ள அத்தனை குர்பானி பிராணிகளையும் ஊர்வலமாக அழைத்து வந்து குழந்தைகளை மகிழ்விக்க செய்யும் காலம் வந்தாலும் வரும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எல்லப் புகழும் இறைவனுக்கே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [27 October 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23124

அல்லாஹ்வின் பல்வேறு படைப்புகளில் ஒட்டகமும் ஓர் அற்புதமான படைப்புதான். மாஷா அல்லாஹ்! அதன் குணாதிசயங்களும் உண்ணும் பருகும் முறைகளும் வித்தியாசமாகவே இருக்கும். பாலைவன கப்பலாயிற்றே? (மணலாரண்யத்தில்) மணற்பரப்பில் நடக்கத் தகுந்தவாறு அதன் பத அமைப்பு பரந்த தாகவே இருக்கும். அது உட்காரும் விதமும் மற்ற எந்த மிருகங்களுக்கும் இல்லாத ஒன்றே! இத் தருணத்தில் அந்த மாபெரும் படைபாளனை மனதாரப் புகழ்வோம். அல்ஹம்ந்து லில்லாஹ்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [27 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23140

அஸ்ஸலாமு அலைக்கும்

சும்மா சொல்ல கூடாது ஒட்டக ஊர்வலம் அருமை .... நம் சிறு பிள்ளைகளின் மன மகிழ்சியே தனி தான்.இதற்கு ஈடு இவ்வுலகில் ஏது இணை......

முக்கியமாக .தம் இல்லக் குழந்தைகளை ஒட்டகத்தில் ஏற்றி, இலவச சவாரி செய்யச் செய்து மகிழ்ந்தது....சரி தான். . இலவச சவாரி செய்தியை தான் நம்மால் நினைத்து பார்க்கவே முடிய வில்லை ...காரணம் நம் ஊரில் தான் எதற்கு எடுத்தாலும் ...பணத்தை புடக்குவார்களே ....அப்படி இருக்க இது எப்படி சார் நடத்து ......ஆச்சரியம் ...ஆனால் உண்மை ..............அப்படித்தானே ...... .

என் அன்பு நண்பர் .வங்காளம் .உமர் அவர்களின் ஒட்டக போட்டோ போஸ் அருமை ....நண்பா நீ ஊர் சென்றது இந்த ஒட்டக போஸ் கொடுக்கதனோ .....சும்மா தமாசு .....உன்னுடைய இந்த சபர் நல முறையில் நடந்து வர ...இந்த சிறப்பான நல் நாளில் தம்மையும் / தம் குடும்பத்தார்களையும் வாழ்த்தி ....துவா கேட்கின்றேன் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பாளை வானத்திலும் இதன் மேல் ஏற அசை பட்டாள் 10 DIRHAMS
posted by HASBULLAH MACKIE (Dubai) [28 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23161

எல்லோருக்கும் இனிய ஈத் முபாரக் நல வாழ்த்துக்கள்.

முன்பெல்லாம் நம்ம ஊரில் ஒட்டகைகளை பார்க்க முடியாது. இந்த மாதிரி சமயங்களில் சிறிய குழந்தைகளின் ஆசைக்காக ஊர்வலமாக எடுத்து செல்லுகின்றார்கள்.

பாலை வனத்தில் மலிந்து கிடக்கின்ற ஒட்டகத்திற்கு மேல் ஏறினாலும் கூட ஒரு ஆளுக்கு 10DHS கொடுக்கணும்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved