பூப்பந்துப் போட்டி உள்ளிட்ட மாவட்ட அளிவலான விளையாட்டுப் போட்டிகளுக்கு போட்டியாளர்கள் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிகள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டிகள் 30.10.2012 அன்று காலை 08.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் எந்த வயதினரும் கலந்துகொள்ளலாம் - வயது வரம்பு கிடையாது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 7 வீரர்கள் மற்றும் 7 வீராங்கனைகள், மாநில அளவில் சென்னையில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவினத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதற்பரிசாக ரூ.10,000 தொகையும், 2ஆவது பரிசாக ரூ.7,500 தொகையும், 3ஆவது பரிசாக ரூ.5,000 தொகையும், 4ஆவது பரிசாக ரூ.3,000 தொகையும் வழங்கப்படும்.
இது தவிர, அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. தூத்துக்குடி விளையாட்டரங்கத்தில் தடகளம், கால்பந்து. நீச்சல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 30.10.2012 அன்று காலை 08.00 மணிக்கு பின்வரும் விபரப்படி நடத்தப்படும்:-
தடகளம் (மாணவர்கள்): 100 மீ., 400 மீ., 1500 மீ., நீளம் தாண்டுதல் மற்றும் குண்டெறிதல்
தடகளம் (மாணவியர்): 100 மீ., 400 மீ., 800 மீ., நீளம் தாண்டுதல் மற்றும் குண்டெறிதல்.
நீச்சல் (மாணவர்கள்): 100 m. Free Style, 100 m Breast Stroke, 100 m. Back Stroke, 100 m. Butterfly
நீச்சல் (மாணவியர்): 50 m. Free Style, 50 m Breast Stroke, 50 m. Back Stroke, 50 m. Butterfly
தடகளப் போட்டிகள் மற்றும் நீச்சல் போட்டிகளில் ஒரு வீரர் அல்லது வீராங்கனை ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் வீரர் - வீராங்கனைகள் 30.10.2012 அன்று காலை 07.30 மணிக்கு, தூத்துக்குடி விளையாட்டரங்கத்திற்கு வருகை தர வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள எந்த விதமான தினப்படியோ, பயணப்படியோ வழங்கப்பட மாட்டாது. போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |