குவைத் நாட்டில் 26.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலை 07.00 மணியளவில், குவைத் - ஷர்க் என்ற பகுதியில் அமைந்துள்ள தமிழ் பள்ளிவாசலில், தமிழகத்தின் ஏராளமான முஸ்லிம் மக்களுடன் இணைந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவரும், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளிவாசலில் முன்பு இயங்கி வந்த ரூஹுல் இஸ்லாம் (சுலைமானிய்யா) திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் முன்னாள் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் ஜமாலுத்தீன் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தியதோடு, உணர்வூட்டும் அழகிய குத்பா பேருரையாற்றினார்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், அதில் கலந்துகொண்ட காயலர்கள் தமிழகத்தின் அனைத்து முஸ்லிம் மக்களுடனும், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அதன் பின்னர், ஒரே இடத்தில் அமர்ந்து பெருநாள் காலை உணவுண்டனர். கோழிக் கறி, பரோட்டா, ஜவ்வரிசி பாயசம், வட்டிலியாப்பம் ஆகிய பதார்த்தங்கள் காலை உணவாகப் பரிமாறப்பட்டது. மதிய உணவாக அனைவருக்கும் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது.
தகவல்:
K.S.அமானுல்லாஹ்
படங்கள்:
M.T.அபுல் ஹஸன் |