தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழைக் காலமாகும். இதனையொட்டி, மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புக் குறிப்புகள் குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
(01) மழைக்காலங்களில் ட்ரான்ஸ்ஃபார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே வயர்கள் அருகே செல்லக் கூடாது.
(02) மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பி அருகே செல்லக்கூடாது. எங்கேனும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்குத் தகவல் அளிக்க வேண்டும்.
(03) மழைக்காலங்களில், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும்.
(04) இடி - மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள்.
(அ) இடி - மின்னலின்போது கான்க்ரீட் கூரையிலான பெரிய கட்டிடங்கள், வீடுகள், பேருந்துகள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும்.
(ஆ) இடி - மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது.
(05) இடி - மின்னலின்போது அருகில் உரிய இடம் இல்லையெனில், மின் கம்பிகள் - மின் கம்பங்கள் - உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(06) இடி - மின்னலின்போது தாழ்ந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.
(07) இடி - மின்னலின்போது டிவி, மிக்ஸி, க்ரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
(08) ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான எர்த் பைப் (Earth Pipe) போடுவதுடன், அதை குழந்தைகள் - விலங்குகள் தொடாத வகையில் அமைத்துப் பராமரிக்க வேண்டும்.
(09) மின் கம்பத்திற்காகப் போடப்பட்ட ஸ்டே வயரின் மீது அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணியைக் காய வைக்கக் கூடாது.
(10) மின் கம்பத்திலோ, அதைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது.
(11) மின் கம்பங்களைப் பந்தல்களாகப் பயன்படுத்தக் கூடாது. அவற்றின் மீது விளம்பரப் பலகைகளைக் கட்டக் கூடாது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |