வட அமெரிக்காவில் 26.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள 'ப்ளேனோ' பள்ளியில் மூன்று தடவையாக பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது. இத்தொழுகையில், காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
'முஸ்லிம் ஸ்டுடென்ட் அசோசியேசன் (MSA)' ஒருங்கிணைப்புடன் 'டி.எஃப்.டபிள்யு. நண்பர்கள்' அமைப்பின் சார்பில் அன்றிரவு 'காலின்' கல்லூரி வளாகத்திலுள்ள அரங்கத்தில் பெருநாள் ஒன்றுகூடல் நடைபெற்றது. 'மக்ரிப்' தொழுகையை அங்கு நிறைவேற்றி விட்டு பெருநாள் விருந்தில் - காயலர்கள் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம்கள் தம் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
1. Re:...ஈத் முபாரக் posted byNIZAR AL (kayalpatnam)[27 October 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23153
அமெரிக்காவில் ஈதுல் அல்ஹா என்னும் ஈகை திருநாள் கொண்டாடும் அணைத்து காயல் சகோதர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்களை தெர்விதுகொள்கிறேன்,
ஒன்று கூடல் புகைபடத்தில் பிலேனோ மஸ்ஜிதின் தோற்றம் பிரமாதம். மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் எங்கே கூடுகிறார்கள், நம் காயல் சகோதர்கள் எவ்வலு பேர் அமெரிக்காவில் உள்ளார்கள் என்று தெரியவில்லை, எங்கிருந்தாலும் நம் மக்கள் வாழ்க வளமுடன்,
>>>>> என் அன்பு சகோதரர் ....அனைவர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .......தங்கள் யாவர்களும் இந்த மிக சிறப்பான நல் நாளில் எல்லா நற் பலன்களும் பெற்று நீடித்த ஆயுளுடன் ....ஒற்றுமையான முறையில் சகோதர பாசத்துடன் வாழ்ந்து வர கிருபை செய்து அருள் வானகவும் ஆமீன்.................
U.S.A. ல் நம் ஊர் மக்கள் இவ்வளவு பேர் உள்ளார்களா .....பார்க்கவே ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது ....
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross