காயல்பட்டினத்தில் 27.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
பெருநாள் தொழுகையையடுத்து, காயலர்கள் தம் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆண் - பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நண்பர்களுடன் தெருப்பகுதிகளில் ஒன்றுகூடி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
ஹஜ் பெருநானை முன்னிட்டு, நேற்று மாலை 04.30 மணி முதல் கடற்கரையில் காயலர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரண்டனர். பொதுமக்கள் வருகையைக் கருத்திற்கொண்டு பல்வேறு நடைபாதைக் கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது. காட்சிகள் பின்வருமாறு:-
2. Re:...ஆனந்தம் posted byNIZAR AL (kayalpatnam)[28 October 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23174
செய்தியாளர், எஸ்கே,மற்றும் ஹாமீது ரிபாய் தம்பிமார்களுக்கு நன்றிகள். படம் பார்த்து முடியல்ல,இவ்வளவு பட காட்சிகளா என்று பிரமிக்கும் அளவிற்கு அனைவரையும் கவர் செய்துள்ளிர்கள், பொதுவாக நம்ம ஊரில் பெருநாள் தொழுகை பல நாட்கள் நடந்தாலும் ஒன்று கூடல் என்பது ஒருநேரத்தில் நடப்பது தான் நமக்கு மிகுந்த சந்தோசத்தையும்,வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளவும், மிகவும் இனிமையான நேரமாக இருக்கிறது.
பெரிய வேடிக்கை என்ன வென்றால் வெளிநாடுகளில் வாழும் காயல் மக்கள் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுகிறார்கள், அனால் நம்ம ஊரில் தலைகீழாக உள்ளது. மாற்று மத சகோதர்கள் உங்களுக்கு எப்பொழுது என்று பிரித்து கேட்கும் அளவுக்கு இருக்கிறது. இது இப்படி இருக்க ஊரு மக்களின் ஓட்டுமொத்த ஆசை, ஆவல்,ஒரே நாளில் பெருநாள் இருப்பதை தான் ஏங்குகிறது என்றே சொல்லலாம்.
பல அமைப்புகளாக இருந்தாலும் பெருநாளில் ஆவது ஒன்று சேர மாட்டோமா என்று அணைத்து உள்ளங்களும்,நண்பர்கள் வட்டாரமும் நினைக்கிறது,அனால் இது எதனால் ஏற்படுகிறது,ஒவ்வொரு அமைப்புகளின் ஈகோவிழா,அல்லது வேறது காரணமா என்பது,புரியாத புதிராகவே உள்ளது,
இப்படியே சென்றால் வருங்காலங்களில் மக்கள் இதற்கு தீர்வு ஏற்படுத்திவிடுவார்கள்,இன்றைய காலத்தில் மக்கள் ஒற்றுமைக்கே முதலிடம் கொடுக்கிறார்கள்.இன்ஷா அலலாஹ் வரும் காலத்திலாவது ஒன்றாக இணைந்து பெருநாட்கள் கொண்டாடும் அந்த நல்ல நிகழ்வை அலலாஹ் நம் காயல் மக்கள் அனைவருக்கும் எட்படுதுவானாக என்று வல்லவநிடமே இறைஞ்சிடிவோம்.
3. Re:...காயல்பட்டினம்..... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23176
காயல்பட்டினம்.... இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும். அலைகளின் வாயும் ஹதீதுகள் பேசும்.....என்று ஒரு கவிஞர் நமதூர் கடற்கரை நண்டுகள் ஊர்ந்து செல்லும் கோட்டின் அழகையும், அலைகள் வந்து மோதும் எழிலையும் வர்ணிப்பார்.
என்ன அழகான தோற்றம். இங்கே மக்கள் கூட்டம். சிறுவர்கள் ஆட்டம் பாட்டம். தொழுகை நேரத்தில் ஜமாஅத் நடக்கும் பாங்கு. எவ்வளவு அழுத்தமான உள்ளத்தோடு வந்தாலும் சற்று கடற்கரையை சுற்றிவந்து சென்றால் துயரங்கள் பறந்து போவதை காணலாம். இது அனுபவித்து உணர்ந்து பார்க்க வேண்டிய கடற்கரை.
ஆனால் சூதாட்டங்களும் தவறான நிகழ்வுகளும் இங்கு அரங்கேறுவதாக ஆங்காங்கே சில செய்திகள் கசிகின்றன. இதன் புற தூய்மையை பாதுகாக்க நகர்மன்றம் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். உள தூய்மையை பாதுகாக்க நமதூரில் அமைக்கப்பட்டுள்ள kayalpatnam beach users association உடனடியாக களம் இறங்கி ஆவன செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். காலம் கடந்தபின் கைசேத படுவதில் பயனில்லை.
4. Re:...மழையின் காரணமாக மக்கள் மனது posted byTM.RAHMATHULLAHThu (Kayalpatnam)[28 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23177
மழையின் காரணமாக ஈரத்தின் தாக்கம் ஏற்பட்டு கடற்கரை நாத்து போனதால் மக்கள் மனதும் நார்த்துப் (NORTH) போய்விட்டது போல் தெரிகிறது. அதுதான் சவுத்து போய் கடற்கரை பக்கம் (EAST க்கு ). அதிகமாக வராமல் சவுத்து (SOUTH ) பக்கம் போய்விட்டார்களா? என்னவோ?
மனதை தேத்திக்கொண்டு இன்றாவது வருவார்களா? அப்பந்தான் கொழந்தே குட்டீங்களுக்கு கொஞ்சமாது உற்சாகமாவது இருக்கும். அப்படியே வந்தாலும் கட்டாயம் ( WEST )மேற்கு பக்கம் இருந்து மங்க்றிப் தொழுகைக்கு அழைப்பு வந்ததும் (FAWUTH ) கழா வாக்கஈவிடாமல் ஜமாத்துக்கு விரைந்து சென்றிட வேண்டும். எல்லோருக்கும் ஈதுல். அழுஹா. MUBAARAK. VASSALAAM.
5. Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[28 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23178
சகோதரர் ரிபாயே உங்கள் கைதான் வலிக்காதா?
நீங்கள் ஓய்வுக்காக ஊருக்கு போனதாக தெரியவில்லை.
ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலேயும் வலம் வந்து கொண்டிருப்பதாக கேள்வி. உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள்.
காயலர்களின் கண்ணியம் நீண்டுகொண்டிருப்பது போல் காட்சிகளும் நீண்டுகொண்டே இருக்கும். அத்தனையையும் படமெடுக்க நினைத்தால் அடுத்தபெருநாள் வந்து விடும்.
அனைத்து காயல் சகோதரர்களுக்கு என் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!
6. Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23181
சகோதரர் நிசார் அவர்கள் ஆதங்கம் புரிகிறது. எல்லோரது மனங்களும் இப்படி புண்பட்டிருக்கிறது இதை பண்படுத்த உலமாக்கள் முன்வரவேண்டும். அரசியல் கட்சிகளிலே குழுக்கள் இருப்பதுபோல் இங்கும் குழுக்கள் வந்து குவிந்து விட்டன. துயரம் தொண்டையை அடைக்கிறது நீங்கள் ஊரில் இருப்பதால் இதை நன்கு அறிவீர்கள். நடுநிலையாளர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. செய்வது அறியாது திகைதுக்கொண்டிருக்கிரார்கள். மூன்று பெருநாளுக்கும் குர் ஆன் ஹதீதிலிருந்துதான் ஆதாரம் சொல்கிறார்கள்.
ஜும்மாவுக்கு அளிக்கப்படும் நோடிஸ்களை பாருங்கள். ஒரு கூட்டத்தை பற்றி இன்னொரு கூட்டம் ஒரே தாய் மண்ணில் பிறந்தவர்கள். ஒரே இஸ்லாத்தின் கொடியை ஏந்தி பிடித்தவர்கள் ஒரே கலிமாவை சொன்னவர்கள் எவ்வளவு அசிங்கமாக திட்டி தீர்க்கிறார்கள் சுபுஹானல்லாஹ். இந்த நிலைமையில் ஒற்றுமையை ஒரே நாளில் பெருநாளை எப்படி எதிர்பார்க்க முடியும்... NO CHANCE ...
7. Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[28 October 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23185
படங்கள் அருமை . படங்கள் எடுத்த போட்டோகிராபர் எப்படி , சளைக்காமல் இவ்வளவு போட்டோக்களையும் எடுத்து தள்ளினார் ? ஆச்சரியம்தான் .
வழக்கமாக SK Salih காக்காதானே போட்டோக்கள் எடுப்பார் . இந்தமுறை அவரும் போட்டோவில் தெரிய வேண்டும் என்பதற்காக அடுத்தவரிடம் இந்த பொறுப்பை கொடுத்துவிட்டார்போலும் . ஹ்ம்ம்ம் ஆசை யாரைத்தான் விட்டது .
8. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[28 October 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23206
எங்களைப் போல ஊரை விட்டு பிரிந்தது இருப்பவர்களுக்கு. பெருநாள் என்றவுடன் ஊரின் காட்சிகள், கடற்க்கரை ஒன்று கூடல் கட்சிகள் எப்போது வலை தளத்தில் பதிப்பார்கள் என்று ஆவலுடன் இருப்போம்.
நன்றிகள் பல.. வலைத்தளம் மற்றும் சகோ. ஹாமித் ரிபாய் அவர்களுக்கு.
நண்பர்கள் அவர்களின் குழுக்களாக, குழந்தைகள் அவர்களின் குழுக்களாக, குடும்பங்கள் அவர்களின் குழுக்களாக்க( ஜெஸ்மின்(KAZ) குடும்பம், கரூர் டிரேடர்ஸ் குடும்பம்) இருப்பதை கண்டு பூரிப்பு.
நான் நேரில் சந்திக்க நினைக்கும் சுப்ஹான் காக்கா, சகோதரி குழந்தைகள், குடும்ப உறவுகள், நண்பர்கள் குழு ஆகியவர்களை கண்டும் சந்தோம்.
** சகோ. S.K. ஸாலிஹ் , நீ இப்படி சாளை நவாஸை திட்டுவது நியாயம் இல்லை. உங்களின் சண்டையை உலகம் பூர பார்த்து விட்டார்களே. !!
11. தயவு செய்து இதை ஒரு ஃபீட் பேக்காக எடுத்துக் கொள்ளவும். posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[29 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23222
அனைவருக்கும் என் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழத்துக்கள். கடற்கரை காட்சிகளை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருதேன். போதும் போதும்ங்கிற அளவுக்கு அசராமெ படம் பிடித்து 4 GB மெமோரிகார்டு ஃபுல்லா ஆயிருக்குமே?
இத்தளத்தில் களத் தொகுப்பில் ரிஃபாய் அவர்கள் ஆற்றும் உதவி மிகப்பெரியது. அவரது இந்த விடுமுறை காலங்களில் கூட பல செய்திகளையும், நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டி வருகின்றார். வாழ்த்துக்கள்...! பார்த்தீர்களா நாங்கள் (வாசகர்கள்) என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று...?
குசும்பு: ஃபோட்டொவை மேலிருந்து சொல்லணும்ன்னா நிறைய எண்ண வேண்டியிருக்கும். அதான், கீழே இருந்து சொன்னா ஐந்தாவது ஃபோட்டோ S.K.சாலிஹ் மண்ணின் மைந்தனைப் பார்த்து கையைக் காட்டி கூறுவது என்னவென்றால்,
”இவன்டெ அதாபு தாங்க முடியல்லெ.. ஆறு மாசத்து ஒருமுறை ஹிஜாஸ் மைந்தன் மாதிரி வந்து உழுந்தறான்... இந்த மைந்தன்ங்கிறவங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்களோ...?”
சரிதானே நான் கூறியது? அந்த மண்ணின் மைந்தனுக்கே வெளிச்சம்.- ராபியா மணாளன்.
13. Re:... posted byNoohu T (மா பா)[29 October 2012] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 23228
பிறப்பிடம் : காயல்பட்டிணம், மரைக்கார் பள்ளி தெரு (மா பா )
இருப்பிடம் : ஹாங் காங்
தயவு செய்து என் கருத்தை நிராகரித்து விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
Moderator: நன்றி. கருத்துக்களைப் பதிவு செய்யும் பக்கத்தில், 'Place' என்ற கட்டத்தில், தாங்கள் எங்கிருந்து கருத்துப் பதிவு செய்கிறீர்களோ, அந்த ஊரின் பெயரைப் பதிவு செய்யவே கேட்டுக்கொள்ளப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross