காயல்பட்டினத்தில் 27.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
பெருநாள் தொழுகையையடுத்து, காயலர்கள் தம் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆண் - பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நண்பர்களுடன் தெருப்பகுதிகளில் ஒன்றுகூடி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
காயல்பட்டினம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த காயலர்கள், மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் அருகில் ஒன்றுகூடிய குழுப்படக் காட்சிகள் பின்வருமாறு:-
|