இலங்கையில் 27.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் அந்நாட்டின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு - புகாரீ அன் கோ இல்லத்தில் காயலர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக, இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் அவர்களின் மருமகன் - சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர் ஜவஹர், திருச்சி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத், அவரது மகன் அலாவுத்தீன், அவர்களது மருமகன் எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும் - வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு பெருநாள் விருந்தாக பரிமாறப்பட்டது.
தகவல் & படங்கள்:
N.அப்துல் காதிர் |