காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஹஜ் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் 26.10.2012 அன்று, மழலையர் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு மற்றும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இறையருளால் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் காயலர் ஒன்றுகூடல் 26.10.2012 ஹஜ் பெருநாளன்று இரவு 07.00 மணிக்கு, ஹாங்காங் Middle Road Park இல் நடைபெற்றது.
ஜனாப் யானி Y.M.M. முஹம்மது இப்ராகிம் அவர்களின மகன் M.I. முஹம்மது முஹிய்யதீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஹாஜி S.M. உஜைர் அவர்கள் தலைமை தாங்கினார் . பேரவை செயற்குழு உறுப்பினர் ஜனாப் M. செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி அனைவரையும் வரவேற்றார்.
பேரவையின் தலைவர் ஜனாப் M.M.S. காழி அலாவுத்தீன் வாழ்த்துரை வழங்கி பேரவையின் சமீபத்திய செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். ஹாஜி S.M. உஜைர் மற்றும் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் அவர்கள் பெருநாள் வாழ்த்துரை வழங்கினார்.
பேரவை உறுப்பினர் ஜனாப் M.N. ஷாகுல் ஹமீது அவர்கள் இஸ்லாமிய பாடல் பாடினார். பின்னர், ஹாங்காங் வாழ் காயலர்களின் மழலைச் செல்வங்கள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மழலையர் நிகழ்சிகளை ஹாஃபிழ் B.S. அஹ்மத் ஸாலிஹ் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் தமது இனிய மழலை மொழியில் அருள்மறை திருக்குர்ஆனின் சிற்சிறு அத்தியாயங்களை அழகுற ஓதினர், சங்கைமிகு சலவாத் ஓதினர், இஸ்லாமிய பைத்துகள் பாடினர் மற்றும் சீன பாடல்கள் பாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஹாங்காங், மகாவ் மற்றும் சீனா வாழ் காயலர்கள் 200 க்கும் மேற்பட்டோர் தம் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா , துபாயில் இருந்து முஜ்ஜம்மில் மற்றும் அஷ்ரப் அலி, சென்னையில் இருந்து S.O.B. சாஜித் மற்றும் மாலிக், ரியாதில் இருந்து உமர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிறைவாக நன்றியுரைக்குப் பின், ஹாஃபிழ் M.N. முஹிய்யதீன் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.J.முஹம்மத் பாக்கர்
செயலாளர்
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் |