ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் 27.10.2012 முதல் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் மாடுகள் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டது. ஒரு பங்குக்கு ரூபாய் 2000 வீதம் 182 பங்குகள் பெறப்பட்டு, மாடுகள் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டது.
மாடுகள் அறுக்கப்பட்டு, அவற்றின் இறைச்சி பிரித்தெடுக்கப்பட்டு, பங்குதாரர்களுக்கு சமமாகப் பிரித்து, தனித்தனி பைகளில் வைக்கப்பட்டது. அவற்றை பங்குதாரர்கள் எடுத்துச் சென்றனர். காட்சிகள் பின்வருமாறு:-
தகவல்:
தேக் முஜீப் |