ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், மருத்துவக் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி, 28.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அதன் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, கே.எம்.டி.மருத்துவமனை செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், காயல்பட்டினம்-ஆறுமுகநேரி மேனிலைப்பள்ளி (கே.ஏ.மேனிலைப்பள்ளி)யின் ஆட்சிக்குழு தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் ஆகியோர், காயல்பட்டினம் நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அபூதபீ காயல் நல மன்றத்தின் பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் உறுப்பினர் ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதன் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஹமீத் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து, மருத்துவர் பாவநாசகுமார், துபை காயல் நல மன்றத்தைச் சேர்ந்த டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர் மருத்துவக் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கப் பிரதிகளை அபூதபீ காயல் நல மன்றத்தின் செயலாளர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை வெளியிட, முதல் பிரதியை நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் பெற்றுக்கொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை மேடையில் முன்னிலை வகித்தோர், தம்மாம் காயல் நற்பணி மன்ற தலைவரும் - இக்ராஃ கல்விச் சங்க துணைத்தலைவருமான டாக்டர் இத்ரீஸ், கே.எம்.டி.மருத்துவமனை மருத்துவர்கள், நகரப் பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டு, அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், அபூதபீ காயல் நல மன்ற நிர்வாகிகள், செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், நகரப் பிரமுகர்கள், கே.எம்.டி.மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அபூதபீ காயல் நல மன்றத்தைச் சேர்ந்த சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், நோனா அபூ ஹுரைரா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |