காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, 28.10.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் நிர்வாகி முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன், துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், முன்னாள் மாணவர்கள் ஃபாரிஸ், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் உரையாற்றினர்.
பயின்று முடித்துவிட்டு பிரிந்து சென்றாலும் படித்த பள்ளியை மறவாமல் அடிக்கடி தொடர்புடன் இருக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர்கள் தமதுரையில் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|