ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் 27.10.2012 முதல் 30.10.2012 வரை நான்கு நாட்கள் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டது.
பள்ளிவாசல்கள் - பொதுநல அமைப்புகள் தவிர, நகரின் சில பகுதிகளில் கூட்டுக் குடும்பத்தினர் தத்தம் வீட்டுத் தோட்டங்களிலேயே கூட்டாக உள்ஹிய்யா கொடுக்கும் வழமையும் உள்ளது. ஆட்டுக் கிடா உள்ஹிய்யா கொடுப்போர் பெரும்பாலும் தத்தம் இல்லங்களையொட்டி தனித்தனியாக கொடுப்பர். மாடுகளை குடும்பத்தினர் கூட்டாக உள்ஹிய்யா கொடுப்பர்.
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த கூட்டுக் குடும்பத்தினர் - அங்குள்ள பிரபு தோட்டத்தில் கூட்டாக உள்ஹிய்யா கொடுத்தனர். 15 மாடுகள், 13 ஆடுகள் அங்கு உள்ஹிய்யா கொடுக்கப்பட்டுள்ளது. காட்சிகள் பின்வருமாறு:-
இத்தோட்டத்தில், ஆண்டுதோறும் இக்குடும்பங்களின் சார்பில், ரமழான் காலங்களில் ஏதேனுமொரு நாளில் நோன்பு நோற்பு - ஸஹர், நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதும், நகர பொதுநல அமைப்புகள் - அரசியல் கட்சிகளின் அங்கத்தினர் பங்கேற்கும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி ரமழானில் ஏதேனும் ஒரு நாளில் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. |