காயல்பட்டினத்தில் வாத்து போன்று பப்பாளி பழம் காய்த்துள்ளதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்தவர் பாரூக் அலி மகன் அப்துல்லாஹ் (35). இவர் தந்தை மற்றும் சகோதரருடன் காயல்பட்டினம், முஹ்யித்தீன் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர்.
இவரது வீட்டில் காய்த்த பப்பாளிப் பழம் வினோதமாக இருந்தது. அது வாத்து போன்று இருந்ததால் அதனை அப்பகுதியைச் சேர்ந்த பலர் வியப்புடன் பார்த்து சென்றனர். அப்துல்லாஹ்வின் மகள் ஆஸியா வினோத பப்பாளிப் பழத்தைக் காண்பிக்கும் காட்சி:-
அப்துல்லாஹ் - நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் வினோதமான பொருட்களை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர். அதிகமாக புத்தகங்கள் வாசிக்கும் இவர் 2.5 கிராம் எடையுள்ள மிகச்சிறிய கோழி முட்டை, 6 செமீ அளவும் - 6 கிராம் எடையுள்ள சிறிய தேங்காய், 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட பெரிய தேங்காய் உட்பட வினோதமான பல பொருட்களை சேகரித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2. Re:...தலைப்பு posted byNIZAR AL (kayalpatnam)[02 November 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23380
பப்பாத்து, வாத்து, பொருத்தமான தலைப்பை செய்தியாளர் தந்திரிக்கிறார். இப்படி நிகழ்சிகளை எப்படி எடுத்துகொள்வது என்று விளங்கவில்லை, வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகளால் இப்படி என்பதா? அல்லது அதிசயம் என்பதா என்பதை எனக்கு சொல்ல தெரியவில்லை, மேலும் இவரிடம் இன்னும் சில பொருட்கள் இருப்பதாக செய்தியாளர் சொல்கிறார், அதையும் படம்பிடித்து காட்டி இருக்கலாமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross