ஒரு வீட்டிற்கு ஒரு காஸ் சிலிண்டர் இணைப்புதான் என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளவர்கள் அல்லது ஒரே முகவரியில் - கணவன் பெயரிலும், மனைவி பெயரிலும் இணைப்பு வைத்துள்ளவர்கள் - நவம்பர் 15 க்குள் தங்கள் கூடுதல் இணைப்பை திரும்பி வழங்கவேண்டும் என்றும், அவ்வாறு வழங்காதபட்சத்தில் - அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும் என்றும் பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
காஸ் இணைப்புகள் வழங்கும் மூன்று நிறுவனங்களும் (INDIAN OIL CORPORATION, BHARAT PETROLEUM, HINDUSTAN PETROLEUM) சந்தேகத்திற்குரிய இணைப்புகளின் விபரங்களை வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் - கண்டிப்பாக KNOW YOUR CUSTOMER (KYC) என்ற படிவத்தை நவம்பர் 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காயல்பட்டினத்தில் பெருவாரியான இணைப்புகள் வேலவன் காஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் (BHARAT PETROLEUM) மூலம் வழங்கப்பட்டுள்ளன. அந்த நிறுவன பட்டியலில் உள்ள சந்தேகத்திற்குரிய இணைப்புகள் விபரத்தை காண இங்கு அழுத்தவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross