தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், நகரிலுள்ள ஏழை - எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக ரூ.29,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எஸ்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (varah). தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பாக 04/11/2012 அன்று மஸ்ஜித் தௌஹீத் ஜும்ஆ பள்ளி கதீப் அப்துல் மஜீத் உமரி அவர்கள் முன்னிலையில் நமதூரைச்சார்ந்த 12ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்காக ஜகாத் நிதி ரூபாய் 29,000/- வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த காலங்களில் இந்நிகழ்ச்சியை போட்டோ போட்டதின் நோக்கம் என்னவென்று சொன்னால் ஒரு அமைப்பு சார்ந்து இருப்பதினாலும்,ஜகாத் நிதியை தருபவர்கள் இன்னாருக்கு கொடுக்கப்பட்டதை அறிந்து கொள்ளவேண்டியும்தானே தவிர விளம்பர நோக்கமல்ல!புகழ் அனைத்தும் இறைவனுக்கே!சில சகோதரர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க போட்டோ எடுக்கவில்லை!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |