காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள நகராட்சி குடிநீர் வினியோகக் குழாயில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடைப்பேற்பட்டு, சாலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், அந்தப் பகுதியை உள்ளடக்கிய 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணியிடம் முறையிட்டுள்ளனர். குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்துவிட்டதாக உறுப்பினர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்றளவும் அக்குழாய் பழுது பார்க்கப்படாத நிலையில் தண்ணீர் வீணாக வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.
1. நகராட்சியை முற்றுகை இடுங்கள் நடந்தே தீரும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[05 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23502
இந்த விபரத்தை குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அங்குள்ள வார்டு உறுப்பினர் பொறுப்பாக தெரிவித்துவிட்ட பின்பும் பல நாட்களாகியும் அதிகாரிகள் இதை சரிசெய்யப்படாமல் இருக்கும் போது அங்குள்ள வார்டு பொதுமக்கள் பெரும் திரளாக நகராட்சியின் தலைவி மற்றும் ஆணையர் இவர்களின் அலுவலக அறையை முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்...! இதுவே தற்போது அணைத்து குறைகளும் சரி செய்யப்பட தீர்வு... அதுவரை இதற்க்கு தீர்வு என்பதே வராது....
மனு கொடுங்கள் நடக்காது...! ஓன்று அல்லது இரண்டு தனி நபர்கள் நேரில் போய் சொல்லுங்கள் அதுவும் நடக்காது...! பெரும் திரளாக நகராட்சியை முற்றுகை இடுங்கள் நடந்தே தீரும்.... அந்த ஏரியா வார்டு உறுப்பினர் மூலம் நடக்காத இந்த காரியம் மக்களால் நடக்கும்....
2. Re:...அம்போன்னு விடப்பட்ட அந்தோனியார்...? posted byOMER ANAS (DOHA QATAR.)[06 November 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23516
இந்த குழாய் உடைப்பு விஷயம் பற்றியும், இவர் பகுதியில் எரியாமல் இருக்கும் தெரு விளக்குகள் பற்றியும், தெருவெங்கும் கொட்டிக் கிடக்கும் குப்பைகள் பற்றியும் அந்தோனியாரிடம் ஊரில் இருக்கும்போது விளக்கம் கேட்டேன்.
வாப்பா என்னால் முடிந்த அளவு சொல்லி விட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேன் என்கிறது. இப்ப அவங்கல்லாம் ஒண்ணா சேர்ந்துகிட்டார்கள். இந்த அந்தோனிய அம்போன்னு விட்டுட்டாங்க வாப்பா என்றார்.
எது எப்படியோ போகட்டும் என்று விட்டு விடாமல் மக்கள் இவரோடு இணைந்து போராடினால் நடக்காதது ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.
விடப்பட்டது அந்தோனியார் இல்லை. ஏழாவது வார்டு!நினைவிருக்கட்டும் நம் பஞ்சாயத்திற்கு.
3. Re:... posted bysalai s nawas (singapore)[06 November 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23522
//வாப்பா என்னால் முடிந்த அளவு சொல்லி விட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேன் என்கிறது. இப்ப அவங்கல்லாம் ஒண்ணா சேர்ந்துகிட்டார்கள். இந்த அந்தோனிய அம்போன்னு விட்டுட்டாங்க வாப்பா என்றார். //
அந்தோணி சாச்சா, அப்போ முன்னாடி எந்த டீமில் இருந்தீங்க? சரி சரி, அது முக்கிய பிரமுகர்கள் இருக்கும் தொகுதி, சீக்கிரம் பார்த்து முடிச்சு கொடுங்க.
4. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[06 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23548
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த போட்டோவை நாம் பார்க்கும் போது..இவ்வளவு தொலைவு தூரத்தில் இருக்கும் நமக்கே கடுமையான வருத்தமாகவே இருக்கிறது ....
அந்த வார்டு உறுப்பினர் சொல்லுகின்ற ...பதில் படு முட்டாள் தனமானது .இவர் சொல்வதை பார்த்தால் ..நம் நகர் மன்றதில் .. பல கூட்டனிகள் இருக்கும் போல் அல்லவா தெரிகிறது .....
அந்த காலத்தில் ஒரு பல மொழி சொல்வார்கள் ......அதாவது ...பிடிக்காத மருமகள் உட்காந்தா ...குத்தம்...நின்றாள் குத்தம் ...என்பார்கள் ..அது போல் தான் .நம் நகர் மன்றம் செயல்படுகிறது. போல் தெரிகிறது....நான் இதை எதற்காக சொல்கிறேன் ..என்பதை புரிந்தால் சரி தான் ............
ஒரு பக்கம் நம் ஊர் மக்கள் '' குடிநீர் '''தட்டுப்பாடால் ...படும் கஷ்டம் நம்மால் தாங்கவே முடிய வில்லை ....எப்போம் தண்ணீர் வரும் ...அதுவும் எவ்வளவு நேரம் '' குடிநீர் ''' விடுவார்கள் ...என்று நாம் காத்து கிடக்கும் போது ............இங்கு என்னவெற்றால் '' குடிநீர் ''' வேஸ்டாகி ரோடுக்கு பலம் சேர்க்கிறது ....எவ்வளவு மன வருத்தம் பாருங்களேன் .....
எவ்வளவு முக்கியமான வேலை இது ...இதை சரி பண்ண கூட நம் நகர் மன்றத்தால் முடியவில்லை ??...ஏன் இவ்வளவு அசால்டு.... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross