காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - சொளுக்கார் தெரு - முத்துவாப்பா தைக்கா தெரு சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அப்பகுதி மக்களால் சிமெண்ட் மூலம் வேகத்தடை அமைக்கப்பட்ட செய்தியை காயல்பட்டணம்.காம் வெளியிட்டிருந்தது.
இந்த வேகத்தடைகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், தமது வாகனங்கள் அவற்றைக் கடந்து செல்கையில் சேதத்திற்குள்ளாவதாகவும், இரவு மின்தடை நேரங்களில் இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் பொதுமக்கள் பலர் அச்சம் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து, அந்த வேகத்தடைகளின் அகலம் அதிகரிக்கப்பட்டு, வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் தற்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. காட்சிகள் பின்வருமாறு:-
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்
[கூடுதல் படம் இணைக்கப்பட்டுள்ளது @ 14:46 / 06.11.2012] |