“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு புதிதாகத் துவக்கப்பட்ட அமைப்பு KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்து வருவதுடன், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் KEPA கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, KEPA ஏற்பாட்டில் - 04.11.2012 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 08.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட - DCW தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில், கடலில் கலக்கும் கழிவுநீர் ஓடையை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் நகரின் பொதுநல அமைப்பினர் நேரில் பார்வையிடுவதற்காக - காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் அருகிலிருந்து வாகனத்தில் சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஷேக் முஹம்மத் உள்ளிட்ட நகர பொதுநல அமைப்பினரும் கழிவுநீர் கடலில் கலக்கும் ஓடையைப் பார்வையிட்டனர்.
அவர்களுக்கு, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில், காயல்பட்டினம் கடலில் கலக்கும் கழிவுநீரின் தன்மை, அதன் பாதிப்புகள், மேற்கொள்ளப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து KEPA அமைப்பின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.
நிறைவில், நகர்மன்றத் தலைவர் மற்றும் குழுவினர் முன்னிலையில், கழிவுநீர் ஓடையின் மாதிரி பொருட்கள் ஆய்வக சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிகழ்வில், KEPA சார்பில் அதன் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ்.அப்துல் வாஹித், எஸ்.கே.ஸாலிஹ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48), கே.எம்.டி.சுலைமான் மற்றும் நகர சுற்றுச்சூழல் ஆர்வலர்களான எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ, எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எஸ்.ஏ.நூஹ் (ஹாங்காங்), எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி (தான்ஸானியா), சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் கணவர் ஷேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |