காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் டி.சாம்ஸன் ஜெல்ராஜ், 07.11.2012 புதன்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 74.
பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேனிலைப்பள்ளி,யில் தலைமையாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய இவர், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் 1994ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகாலம் தலைமையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
பள்ளியின் மாணவர் சீருடை, வருகை, ஒழுக்கம், பெற்றோருடன் தகவல் தொடர்பு, ஆசிரியர்களை வழிநடத்தல் என அனைத்திலும் தனிச்சிறப்புடன் விளங்கிய இவரது பொறுப்புக்காலத்தில் படித்த மாணவர்கள் - தம் முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றியவர் என இன்றளவும் அவரை நினைவுகூர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
08.11.2012 வியாழக்கிழமை மாலை 04.30 மணியளவில், அவரது சொந்த ஊரான நாசரேத் தூய யோவான் பேராலய கல்லறைத் தோட்டத்தில் அன்னாரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகி முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், தலைமையாசிரியர் ஸ்டீஃபன் பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அலுவலர் செல்வம் உட்பட, அவர் பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகிகள் - ஆசிரியர்கள் - மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.M.T.சுலைமான்
துணைச் செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |