இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹாஜிகள் படிப்படியாக தாயகம் திரும்பி வருகின்றனர்.
தாயகம் திரும்பும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹஜ் பயணியர் சிலர், புனித மக்கா நகரிலுள்ள தம் உறவினர் - நண்பர்களைச் சந்தித்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் பின்வருமாறு:-
இதுகுறித்து, ஜித்தா - மக்கா வாழ் காயலர்கள் தெரிவித்துள்ளதாவது:-
இஸ்லாத்தின் இறுதி கடமையான புனிதமிகு ஹஜ்ஜினை நிறைவேற்றிட இவ்வாண்டு தரை,கடல்,வான் வழி மார்க்கமாக உலகின் 189-நாடுகளில் இருந்து மொத்தம் 17,52,392 வெளிநாட்டினர்கள் இங்கு வருகை புரிந்துள்ளார்கள் என சவுதி அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.
மேலும் சவுதி நாட்டை சார்ந்தவர்கள் மற்றும் இங்கு தொழில், பணி நிமித்தமாக உள்ள பிற நாட்டு மக்கள்கள் சுமார் இருபது லட்சம் மக்கள்கள் என சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் அளவில் அல்லாஹ்வின் பேரருளால் பெரும் கிருபையால் புனித ஹஜ்ஜினை ஹாஜிகள் அழகுடன் நிறைவு செய்துள்ளார்கள் எனவும் சவுதி அரசின் ஹஜ்ஜுக்கான அமைப்பினர் உறுதிபடுத்தி உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இவர்களுக்கான மருத்துவ, சுகாதார, பாதுகாப்பு மற்றும் எல்லாவித வசதிகளையும் நல்ல விதமாக சவுதி அரசு செய்தும் கண்காணித்தும் வந்தது பாராட்டுக்குரியது.
இவர்களில் நம் காயல் சொந்தங்கள் இந்திய அரசின் ஹஜ் கமிட்டி வழியாக, தனியார் ஹஜ் நிறுவனம் மூலமாக, குவைத், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் இருந்து நேரடியாகவும் மேலும் சவுதியில் பல நகர்களில் வாழ் காயலர்கள் என சுமார் நானூறு ஹாஜிகள் மட்டில் இந்த ஆண்டு புனித கடமையை நிறைவேற்றி கொண்டார்கள்.மாஷா அல்லாஹ்.
புனித கடமையை வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் இனிதே நிறைவு செய்திட்ட ஹாஜிகளான இந்த பெருமக்கள்களில் சிலர்களை ஜித்தா,மக்காவில் நண்பர்கள், உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.
இனிவரும் ஆண்டுகளில் இப்புனித ஹஜ்ஜினை நம் பிரியமானவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் இலகுவாக இனிதேநிறைவேற்றும் நல்லதோர் பாக்கியத்தை நம்மில் அனைவருக்கும் வல்லநாயன் அல்லாஹ் நசீபாக்கி தருவானாக ஆமீன்.
இவ்வாறு, ஜித்தா - மக்கா வாழ் காயலர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
சட்னி செய்யித் மீரான் (ஜித்தா)
மற்றும்
Y.M.முஹம்மத் ஸாலிஹ் (மக்கா) |