காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் விரைவில் நடைபெறவுள்ள நிர்வாகக் குழு தேர்தல் மற்றும் அப்பள்ளியின் கட்டிட விரிவாக்கப் பணிகள் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி, இன்றிரவு 08.00 மணியளவில் - காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அரங்கில், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில் நடைபெற்றது.
பள்ளியின் நிர்வாகக் குழுவினரான ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.இப்னு ஸஊத் அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளியின் கட்டிட விரிவாக்கப் பணிகள் மற்றும் விரைவில் நடைபெறவுள்ள - பள்ளியின் நிர்வாகக் குழு தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்த ஜமாஅத்தாரின் சந்தேகங்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் விளக்கமளித்தார். முன்னிலை வகித்த நிர்வாகிகள் துணைத்தகவல்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தார் (பொதுக்குழு உறுப்பினர்கள்) திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி, ஐ.ஐ.எம். டிவியிலும், http://www.ustream.tv/channel/iim-kayalpatnam-ramadhan-bayans என்ற இணையதள பக்கத்திலும் நேரலை செய்யப்பட்டது.
|