காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. 10.11.2012 சனிக்கிழமையன்று (இன்று) நள்ளிரவில் இதமான மழை பெய்துள்ளது. மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது..
மழை காரணமாக கொசுக்கள் பெருக்கத்தால் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு - மாடுகள் தெருவோரங்களிலும், கடற்கரையிலும் தஞ்சமடைவதாக காயல்பட்டணம்.காம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 05.45 மணியளவில், காயல்பட்டினம் மங்களவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இக்பால் என்பவரின் மகன் ஷாஹுல் ஹமீத் என்பவரின் - கருவுற்றிருந்த சிவப்பு நிற கறவை மாடு ஒன்று காயல்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - தைக்கா தெரு - பிரதான வீதி சந்திப்பு - சூயஸ் முனையில் நிறுவப்பட்டுள்ள உயர்கோபுர ஒளிவெள்ள விளக்குக் கம்பம் - கட்டிட சுவற்றுக்கும் உள்ள இடைவெளியில் நுழைந்துள்ளது. அப்போது மின்கம்பத்தின் அடியிலுள்ள வயரில் மாடு கால்வைத்தவுடன் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக, அந்நேரத்தில் அவ்வழியே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த - ஜெய்ப்பூரில் தொழில்புரியும் தோல்சாப் எஸ்.எம்.காதர் தெரிவித்தார்.
மின்சாரம் தாக்கி மாடு இறந்த செய்தியையறிந்த காயல்பட்டினம் மின்வாரியத்தினர் உடனடியாக அப்பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தினர். காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் நிகழ்விடம் வந்து மாட்டை அப்புறப்படுத்திச் சென்றனர்.
தெருவிளக்கின் அடியில் இருந்த மின்கசிவால் நிகழ்ந்துள்ள இந்த விபத்தில் மனிதர்கள் யாரும் அந்நேரத்தில் செல்லாமலிருந்தது நன்மையாகிப் போனதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாட்டை தாக்கிய மின்சாரம் மனிதனையும் தாக்கும், அல்லாஹ் மனித உயிர்கள் பலியாவதை விட்டும் நம்மை பாதுகாத்தான். அந்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! அந்த அளவுக்குத்தான் நமது மின்சார வாரியத்தின் அலட்சியமும், அசமந்தப்போக்கும் உள்ளது. இதுபோன்ற ஆபத்துக்கள் நிறைந்த இடங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதையெல்லாம் கண்டறிந்து ,இதுபோன்ற ஆபத்துக்கள் ஏற்படாமல் முன்னட்சரிக்கையாக செயல்பட அனைவரும் செயல்பட வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன். !
2. இத்துறைக்கு மனித உயிர்களும் இன்னும் பிற உயிர்களும் மலிவாகி விட்டன... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[10 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23690
தெரு விளக்கின் மின்சாரம் தாக்கி சினை மாடு பலியான செய்தி மிக கவலை அளிக்கிறது...
பொறுபற்ற பாதுகாப்பற்ற சூழலில் மின் கம்பத்தை அமைத்த காயல்பட்டினம் மின்சார வாரியத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன்..
இத்துறைக்கு மனித உயிர்களும் இன்னும் பிற உயிர்களும் மலிவாகி விட்டன...
3. Re:...மனம் பதறுகிறது posted bymackie noohuthambi (kayalpatnam)[11 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23713
மின் கசிவால் இறந்தது மாடு என்பதால் சும்மா இருந்து விட்டோம். இந்த நிலை எனக்கோ அல்லது வயது முதிர்ந்தவர்களுக்கோ குழந்தைகளுக்கோ நடந்திருந்தால் எவ்வளவு வேதனைபட்டிருப்போம். மின் வாரியத்தை ஒரு பிடி பிடித்திருப்போம். அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு அரசுடன் போராட்டம் நடத்தியிருப்பார்கள். முதலமைச்சர் 3 லட்சம் 5 லட்சம் என்று உயிர்களுக்கு விலை கொடுத்திருப்பார். எத்தனையோ ஊர்களில் இந்த மின் அறுந்த கம்பிகள் தெருவில் கிடப்பதால் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்பு.தெருவில் நடந்து செல்லும் உயிரினங்களா அல்லது இவற்றை சரிவர பராமரிக்காத மின் வாரியமா.வேதனையாக இருக்கிறது. மக்களை எச்சரித்து மின் வாரியம் ஒரு அறிக்கையாவது இணையதளங்கள் மூலம் தொலைகாட்சி மூலம் அல்லது நோடிசாக வெளியிட்டு மக்களை எச்சரிக்க வேண்டாமா?.வேதனையாக இருக்கிறது.
தயவு செய்து பொது மக்கள் மின்கம்பங்களின் அருகே நடந்து செல்லவேண்டாம். அதை தொட்டும்பார்க்க வேண்டாம். மழை காலத்திலும் சரி மற்ற சாதாரண வெயில் காலத்திலும் சரி......எந்த மின்கம்பத்தில் எப்போது மின் கசிவு இருக்கும் என்று யாருக்கு தெரியும். அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.மனித உயிர் எத்தனை விலை கொடுத்தும் வாங்க முடியாது. நாம்தான் பாது காப்பாக இருக்க வேண்டும்..மின் வெட்டு பற்றி கவலைப்படுவது போக மின் கம்பங்களில் மின் கசிவால் உயிர்கள் பலியாகிறதே என்று இப்போது அதிகம் கவலையாக இருக்கிறது..
மாட்டை இழந்த அதன் உரிமையாளர் மின்வாரியம் மீது வழக்கு தொடர வாய்ப்பிருந்தால்.அல்லது நுகர்வோர் பேரவை மூலம் அதற்கு தக்க நிவாரணம் கேட்டுப்பெற வாய்ப்பிருந்தால் நமதூரிலுள்ள நுகர்வோர் பேரவை அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
4. மின் வாரியமே விழித்துக்கொள்...! வீணாக மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம்...! எச்சரிக்கை...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[11 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23716
மனுஷன் செத்துடக்கூடாதுன்னு மாடு போய் மாட்டிக்கிட்டு மறு உலகம் சென்று தியாகியாகி விட்டது.
இதை நான் நகைசுவைக்காக சொல்லவில்லை! படிச்சதும் பதறிப்போனேன். மழைத்தண்ணி கிடக்குதேன்னு பள்ளிக்கூடம் போகும் பச்சிளம் குழந்தைகள், பாதசாரிகள், வயதானவர்கள் இப்படி யாராவது இதுக்குள்ளெ நுழஞ்சிசருந்தா என்னவாயிருக்கும்? குடியெ கெடுக்கப் பார்த்தீங்களே? உயிரோடு இருக்கிறவங்க உபயோகத்துக்கு உருப்படியா கரண்ட் தர வக்கில்லை! உயிரெ பறிக்கிறதுக்கு மட்டும் கரண்ட் எங்கிருந்துதான் வருமோ?
உடனே... சரி செய்து இனியும் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக மின் இழைகளை உள்ளுக்குள் பொருத்த வேண்டும். மின் வாரியமே விழித்துக்கொள்...! வீணாக மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம்...! எச்சரிக்கை...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross