பெய்த மழையினை அளவிடும் கருவி (RAIN GAUGE) - எவ்வாறு நிறுவப்படவேண்டும் என சில வழிமுறைகள் உள்ளன. மிக அருகில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது, மிக அருகில் மரங்கள்/செடிகள் இருக்கக்கூடாது போன்றவை அதில் அடங்கும்.
காயல்பட்டினத்தில் - கிராம அலுவலக அதிகாரியின் அலுவலகத்திற்கு அருகே மழையினை அளவிடும் கருவி (RAIN GAUGE) உள்ளது. கருவியினை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் - அந்த கருவியை தொடும் அளவிற்கு மரங்கள் வளர்ந்துள்ளன.
கட்டிடங்களில் / இலைகளில் படர்ந்துள்ள நீர் - கருவியினுள் செல்லக்கூடாது என்பதற்காகவே தான் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவைகள் - காயல்பட்டினத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி விசயத்தில் - கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இக்கருவி மூலம் வழங்கப்படும் புள்ளிவிபரம் சரியானதாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே.
3. Re:...கருவி posted byNIZAR AL (kayalpatnam)[11 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23724
மழை அளக்கும் கருவி ஊரில் இருப்பதாக என்னைப்போல் அனைவருமே இந்த செய்தியை மூலமே அறிவார்கள் என எண்ணுகிறேன்.
நம்ம ஊரு மக்களுக்கு படம்போட்டு அறிமுக படுத்திய செய்தியாளருக்கு நன்றிகள். இதற்கு என்ன வேறு இடமே இல்லையா? எதோ காட்டில் கழிவறை ஏற்படுத்தி உள்ளது போலவே தெரிகிறது. இப்படி இடத்தில கருவி வைத்துகொண்டு இதற்கான நடைமுறைகள் எங்கே பின்பற்றமுடியும்.
இதை கருவி யாருடைய கட்டுபாட்டில் பராமரிக்கபடுகிறது, நகராட்சியா? அல்லது வருவாய் டிபார்ட்மன்ட்டா? அல்லது வேறு ஏதாவது மழை, புவியியல் சம்பந்தப்பட்ட அலுவலகமா? என்பதை தெரிந்து அவர்களுக்கு தகவல் சொல்லி முறைப்படுத்த பட்டால்தான் மழை அளவை மட்டும் அறிய முடியும், இல்லைனா எல்லாம் முன்னமே சொல்லிடாங்கலே நான் வேற சொல்லனுமா?
4. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[11 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23734
அஸ்ஸலாமு அலைக்கும்
இப்படி ஒரு கருவி இருப்பது நமக்கு நன்கு தெரியும் ......ஆனால் நம் ஊரில் இந்த கருவி பொறுத்த பட்டு இருப்பது நமக்கு ....தங்களின் படத்துடன் வந்து உள்ள செய்தியை அறிந்துதான் ...எங்களுக்கும் & நம் ஊர் மக்களுக்கு ..... படு ஆச்சிரியத்துடன் தெரிய வருகிறது ..... நல்ல செய்திதான் .....பொதுவாகவே நம் மக்களுக்கு இது போன்ற நற் செய்திகள் எல்லாம் கண்டிப்பாகவே தெரிய வரணும்...........
ஆமா இந்த மழையினை அளவிடும் கருவியை பராமரிப்பது யார்?? + இந்த கருவி மூலம் நம் ஊர் மக்களுக்கு நாம் எப்போதாவது மழையின் கணக்கை அளந்து ....தெரியபடுத்தி இருக்கிறோமா ??என்னா..
எனக்கு தெரிந்த காலம் வரை. நம் ஊரில் பெய்த மழையின் அளவை யாருமே தெரியபடுத்தியதாகவே தெரியவில்லை.............
இனியாவது நாம் இந்த மழையின் அளவை கணக்கிடும் ...கருவியை நன்கு பராமரித்து ....நம் ஊருக்கு யுஸ் பண்ணும் விதமாக செயல் ஆக்குவோமாக ............. வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross