காயல்பட்டினத்தில் பெய்யும் மழையை அளவிட, காயல்பட்டினம் - சிவன்கோயில் தெருவில் அமைந்துள்ள - கிராம நிர்வாக அலுவலரின் பழைய அலுவலகத்திற்கு தென்கிழக்கில் மழைமானி (Rain Gauge) அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை, பக்காவாட்டில் சுற்றுச்சுவர்கள், மரங்கள் என எந்தத் தடையுமின்றி - வெட்டவெளியில் மழைமானி அமைக்கப்பட்டால்தான், நகரின் சரியான மழையை அளவிட இயலும் என்றிருக்க, காயல்பட்டினம மழைமானியோ முட்புதர்கள் சூழ அமைந்திருந்ததையும், அதனால் மழை அளவீட்டில் பெருங்குறை ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டி, காயல்பட்டணம்.காம் செய்திகளை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலையில், மழைமானியைச் சுற்றியும், அதன் சுற்றுப்புறத்திலும் படர்ந்திருந்த முட்செடிகள் - காயல்பட்டினம் நகராட்சியால் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி சீர் செய்யப்பட்டுள்ளது.
|