காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்காக தீனிய்யாத் - மார்க்க அடிப்படைக் கல்விப் பிரிவு பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பிரிவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அம்மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து - அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், இன்று காலை 09.30 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் மாணவர் சிறப்புப் போட்டிகள் நடைபெறுகிறது. அதில், கிராஅத், அதான், பேச்சு, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் அனைத்து பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ளுமாறும், பெண்களுக்கு பள்ளியின் மேல் தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும், நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதோரின் வசதிக்காக - நிகழ்ச்சிகளனைத்தும், ஐ.ஐ.எம். டிவியிலும், http://www.ustream.tv/channel/iim-kayalpatnam-ramadhan-bayans என்ற இணையதள பக்கத்திலும் நேரலை செய்யப்படவுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். |