10.11.2012 சனிக்கிழமை அதிகாலையில், காயல்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - தைக்கா தெரு - பிரதான வீதி சந்திப்பு - சூயஸ் முனையில் நிறுவப்பட்டுள்ள உயர்கோபுர ஒளிவெள்ள விளக்குக் கம்பத்திற்கும், கட்டிட சுவற்றுக்குமிடையில் சென்ற சினை மாடு ஒன்று, மின்கசிவு உள்ள வயரில் கால் வைத்ததில், அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தது. அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை முதல் தற்போது வரை, உயர்கோபுர விளக்கு கம்பத்தைச் சுற்றி முட்செடிகள் பரத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரிடம் வினவுகையில், அந்த மின் விளக்கு கோபுரம், கோயமுத்தூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது என்றும், அதில் காயல்பட்டினம் மின்வாரியம் கை வைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர். |