காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி பணியாற்றி, பணி நிறைவு பெற்ற - காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த முருகன் என்ற சுப்பிரமணியன், கடந்த பல நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் - அண்ணாமலை தம்பதியின் மகனும்,
செண்டு என்பவரின் கணவரும்,
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் எஸ்.சிதம்பரம் (கைபேசி எண்: +91 94428 34774), எஸ்.ஆழ்வார், எஸ்.லக்ஷ்மி எஸ்.அண்ணாமலை ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் உடல், இன்று மாலை 04.00 மணியளவில், காயல்பட்டினம் பப்பரப்பள்ளி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
காலஞ்சென்ற முருகனின் இயற்பெயர் சுப்பிரமணியன். தனது 19ஆம் வயதில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்து, 41 ஆண்டுகள் பணியாற்றி, பணி நிறைவுபெற்றுள்ளார்.
அவர் பணியில் சேர்ந்தபோது, எல்.கே.மேனிலைப்பள்ளியின் நிறுவனர் மர்ஹூம் ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி - அவரை நேர்காணல் செய்கையில், ‘சுப்பிரமணியன்’ என்றாலும், ‘முருகன்’ என்றாலும் ஒரே பொருள் கொண்ட பெயர்தான்... எனவே, உன்னை பணி நிமிர்த்தம் அடிக்கடி அழைக்க வேண்டியிருப்பதால் ‘முருகன்’ என்றே அழைக்கிறேன்” என்று கூறியதன் அடிப்படையில், அன்று முதல் அவர் ‘முருகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
தகவல்:
ஹிட்லர் M.சதக்
[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 08:55 / 12.11.2012] |