‘காயல்பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இன்றைய தினத்தந்தி (நெல்லை பதிப்பு) நாளிதழின் ஞாயிறு மலர் இரண்டாவது பக்கத்தில் பின்வருமாறு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது:-
1. Re:... posted bysulaiman (abudhabi)[11 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23740
அஸ்ஸலாமு அழைக்கும்,
சமூக சீரழிவின் பிறப்பிடமாக திகழ்கின்றது சினிமா. இதன் சினிமா கூத்தாடிகள், நமது மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாச்சாரமாக திகழ்கின்ற நமது ஊரையும் வைத்து சினிமா என்ற பெயரில் பொய்யையும், கற்பனையையும், வன்முறையையும், ஆபாசத்தையும் கதையாக்கி பணம் சம்பாதிக்க முயல்வதை ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்தவேண்டும். இதில் நமது ஊர் மக்கள் அனைவர்களும் விழிப்புடன் செயல்பட்டு இந்த சமூக தீமையை முளைலையே கில்லி எறியவேண்டும்.
4. அட! இது என்ன புதுக் கதை...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[11 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23745
இது என்ன சனியனைக் கொண்டு வரப்போகுதோ? தெளிவாக காயல்பட்டணம் என்று தலைப்பு வெச்சிருக்காங்க.
முஸ்லிம் சமுதாய சம்பந்தப்பட்ட கதையாகத்தான் இருக்கும். இல்லாத ஒன்றை இருப்பது போல சித்தரிப்பதுதான் சினிமா! இதன் கதையம்சத்தைக் கேட்டறிந்து தலைப்பை நீக்கிவிட நாம் என்ன செய்ய வேண்டும்? யாரைப் போய் பார்க்க வேண்டும்? ப்ளீஸ்! விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
கையில் துப்பாக்கியோடும் கொலை வெறிப் பார்வையோடும் காலுக்கு மேல் கால் போட்டு கார் பேனரில் அமந்திருக்கும் ஸ்டில்லைப் பார்த்தால் இத் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் நிச்சயம் இருக்கும் எனத் தோன்றுகின்றது.
இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்துமா? கண்ணியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காயலரைக் கொச்சைப் படுத்தாமல் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இருக்க நாம் முற்கூட்டியே செய்ய வேண்டியவைகளைச் செய்தால் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வழி வகுக்கும்.
5. Re:காயல்பட்டணம் பெயரில் திரைப்படம் posted byFuad (Singapore)[12 November 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23751
காயல்பட்டணம் என்ற பெயரில் திரைப்படம். அதுவும் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தினத்தந்தியில் விளம்பரம்!!! அப்படி ஏதேனும் படப்பிடிப்பு நமதூரில் நடப்பதாக இருந்தால் ஐக்கிய பேரவையும், பொதுநல அமைப்புகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
திரைப்படம் என்ற பெயரில் தேவையில்லாத, சர்ச்சைக்குரிய விஷயங்களை திரைப்படமாக்கி பிரச்சனைகளை உருவாகுதற்கு முன் நாம் கவனமாக இருப்பது அவசியம்.
6. Re:...திருநெல்வேலி காயல்பட்டணம் posted bymackie noohuthambi (kayalpatnam)[12 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23752
திருநெல்வேலி என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டர் அது வெற்றிப்படமாக வசூல் பெயர் புகழ் இவற்றையும் அவருக்கு பெற்றுக்கொடுதுள்ளதாம். அந்த எதிர்பார்ப்புடன் இப்போது காயல்பட்டணம் திரைப்படம் தயாரிக்க முனைந்துள்ளார். ஆனால் அதற்காக அவர் காயல்பட்டனத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்தாலோசிதாரா என்பது தெரியவில்லை.
காயல்பட்டினத்தின் வரலாறுகள், அந்த மக்களின் ஆன்மீக லவ்கீக வாழ்வு, அவர்கள் வெற்றி தடம்பதித்த துறைகள் இவற்றை பின்னணியாக கொண்டு மட்டும் அவர் படம் எடுத்தால் இப்போதுள்ள திரைப்பட பிரியர்கள் அதை தோல்வியடைய செய்து விடுவார்கள்.
பெருகிவரும் ஆபாசங்கள். வன்முறை காட்சிகள். காதல் கதைகள், பாலியல் பலாத்காரங்களுக்கு ஒரு வழிகாட்டியாக தமிழ் திரைப்படங்கள் இப்போது அமைந்து விட்டதால். "காயல்பட்டணம்" அந்த வரிசையில் எப்போதுமே வராது.
என்னதான் முன்னேற்றங்கள் இந்த ஊரை தொட்டு நின்றாலும் தொன்று தொட்டு நாம் பேணி காப்பாற்றி வரும் இஸ்லாமிய கலாசாரம். மதுக்கடை இல்லாமை. திரையரங்கு இல்லாமை காவல் நிலையம் இல்லாமை என்ற மூன்றும் நமதூருக்கே சொந்தமான அடையாளங்கள்.
இதில் வட்டிக் கடைகள் மட்டும் எப்படியோ நம்மவர்கள் கண்ணிலிருந்து தப்பியிருக்கிறது. அதையும் ஒழிக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள், பைத்துல் மால் என்ற பெயரில் இயங்கி வரும் நமது பெரியவர்கள். எனவே இந்த நான்கு விஷயமும் இல்லாத ஒரு ஊரை பின்னணியாக வைத்து சினிமா படம் எடுப்பது திருநெல்வேலி தயாரிப்பாளருக்கு ஒத்து வராது என்பதை அவரிடம். அவர் இங்கு யாரை சந்தித்து அபிப்பிராயம் கேட்டாலும் சொல்லிவிடவேண்டும்.
நகரமன்ற தலைவி, உறுப்பினர்கள், பொதுநல அமைப்புக்கள், ஜமாத்துக்கள். ஐக்கிய பேரவை பெரியவர்கள், ஊர் பிரமுகர்கள் எல்லோரும் சேர்ந்து இப்போதே அந்த தயாரிப்பாளருக்கு மின் அஞ்சல் அல்லது கடிதம் எழுதிவிட்டால், காயல்பட்டணம் திருநெல்வேலி அல்ல என்பதை அவர் உணர்ந்து கொள்வார்.
நமது ஊடகங்களும் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது என் அபிப்பிராயமே தவிர அறிவுரை அல்ல. தவாறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை வேண்டிக் கொள்கிறேன்..
7. காயல்பட்டணம் posted byMiskeen Sahib (Bangkok)[12 November 2012] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 23754
Assalamu alaikum
This should be banned இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். நமது ஊர் பெரியவர்களும் ஐக்கிய பேரவையும் சம்பந்த நபர்களிடம் பேசி இதை தடுக்க வேண்டும். முயற்சி செய்தால் இறைவனின் துணை கொண்டு தடுத்து விடலாம் இன்ஷா அல்லாஹ்.
சினிமா என்ற பெயரில் ஆபாசம், வன்முறை, கொலை போன்றவைகளை கொண்டு ஊரை கெடுக்க புறப்பட்டவர்களுக்கு இறைவன் நிச்சயம் அதற்கு உரிய கூலியை கொடுப்பன்,
யா அல்லாஹ் எங்களது ஊர் பாரம்பரியம், கண்ணியம், ஒழுக்கம், மார்க்க பற்று இவைகளுக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்படாதவாறு நீ காப்பாற்றுவாயாக.
10. Re:... posted bysalai s nawas (singapore)[12 November 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23761
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அடுத்து காயல்பட்டணம், அப்புறம் திருச்செந்தூர் சாத்தான்குளம் வள்ளியூர் நாகர்கோவில்-ன்னு அப்படியே ஊர் ஊரா குறவன் குறத்தி டென்ட் அடிச்சி போகுற மாதிரி போவாங்க போலே...
அய்யய்ய்யோஒ இந்த ஹீரோகல்ட இம்சை தாங்க முடியல. கார் ஸ்டார்ட் ஆனா ஆள் பறந்துடுவான் போலே, ஆனா துப்பாக்கி அங்கேதான் இருக்கும்.
11. வேண்டாம் ஒரு கலாச்சார சீரழிவு ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[12 November 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23764
"காயல்பட்டணம் " எனும் பெயரில் திரைப்படம் எடுக்க இருக்கும் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். இதனை முளையிலேயே கில்லி எறியவேண்டும்.
இத்தகைய திரைப்படம் எனும் பெயரில் பல காலாச்சார சீரழிவுகள் ஏற்படும். அதற்கு எந்த வாய்ப்பையும் யாரும் உருவாக்கி தரக்கூடாது.
நகரில் உள்ள அணைத்து ஜமாத்களும், பொது நல மன்றங்களும் இது குறித்து விரிவான ஒரு ஆலோசனையை நடத்தி, யார் ,யாரை தொடர்பு கொண்டால் இதனை தடுக்க முடியுமோ அவர்களை உரிய முறையில் அணுகி மொத்தத்தில் இந்த கலாச்சார சீரழிவை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
இது விசயத்தில் அனைவரும் ஊர் நலன்கருதி செயல்படவும், உலகளாவிய "காயல்நல மன்றங்கள்" கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பி இதனை உடனே தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் வேண்டுகிறேன். வஸ்ஸலாம். !
12. Re:... posted byஹாஜி (ரியாத் )[12 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23766
இன்றைய காலத்தில் எந்த ஒரு திரைப்படமும் காதல், வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் எடுக்கப்படுவதுமில்லை. எனவே இந்த படத்திலும் இதுபோன்ற எல்லா காட்சிகளும் அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமல்லாமல் நம்மூரில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வின் பின்னணியில்தான் இப்படம் அமைந்திருக்கும் எனவும் என்ன தோன்றுகிறது. படம் எடுத்து திரைக்கு வருமுன்னரே இப்படம் பற்றிய செய்தி வெளிவந்து நம் யாவரின் கவனத்திற்கும் வந்ததே இறைவன் நம்மீது செய்த பேரருளாக கருதி முளையிலேயே இதை கிள்ளி எரியவேண்டும்.
படம் வெளிவந்து தேவையில்லாத பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் உண்டுபண்ணி அதன்பின் எதிர்ப்பு, போராட்டம் என்று இறங்குவதை விட இப்போதே உரிய நடவடிக்கைகள் எடுத்து, யாரை சந்திக்கவேண்டுமோ, அவர்களை சந்தித்து இப்படத்தின் பெயரை முழுமையாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், நம்மூர் சம்பந்தப்பட்ட எந்த கதையம்சமும் இதில் இடம்பெறாமல் செய்யவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் எந்த ஒரு படப்பிடிப்பும் நம் ஊரில், நம் தெருவில் நடைபெறாமல் பார்துக்கொள்ளவேண்டும் கேவலமான சினிமாக்கள் மூலம் எந்தவொரு நல்ல பெயரும், கேட்ட பெயரும் நம் ஊருக்கு வரவேண்டிய தேவையில்லை.
அல்லாஹ் நம் மக்களையும், ஊரையும் கப்பற்றுவனாக ...
14. Re:...திரைப்படம் posted byNIZAR AL (kayalpatnam)[12 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23773
ஸ்கார்பியோ காரில் காலை பின்னி உட்காந்து யோசனை முன்பக்கம், துப்பாக்கி பின்பக்கம், இப்படி அதிரடி படம் எடுக்குறதுக்கு இங்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
ஊருல இருக்கிற பிரச்சனை போதாது இந்த சனியன் வேற கேடா. பெயருக்கா பஞ்சம், போடா போடி, கில்லி, பல்லி, பாம்புன்னுதானே வைக்கிறாங்க. எதாவதை வைக்கிறதா விட்டுட்டு நம்ம ஊரு பேரை தேர்ந்தடுக்க வேண்டிய அவசியம் என்னன்னு விளங்கலே.
எப்படியோ இது முளையிலே பிச்சி எறியப்பட வேண்டிய அவசியமான ஒன்றாகும். இதற்கு சென்னை காயல் மன்றம் தலைமையில் மற்ற அணைத்து ஊரு மக்கள், உலக காயல் மன்றங்கள் முழு ஒத்துழைப்பும் ஒற்றுமையுடனும் இணைந்து இதை முறியடிப்பார்கள் என நம்புவோம்.
15. Re:...’காயல் பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம்! posted byசூ.ஹூ.காஜா கமால் (காயல் பட்டணம்)[12 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23774
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஊர் பெயரை வைத்து சினிமா என்ற பெயரில் பொய்யையும், கற்பனைகளையும், வன்முறைகளையும், ஆபாசத்தையும் கதையாக்கி பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்தவேண்டும். இதில் நமது ஊர் மக்கள் அனைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த சமூக தீமையை முளையிலையே கில்லி எறிய வேண்டும்.
16. நமது ஒற்றுமைக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் விடப்பட்டுள்ள சவால் இது! posted byM.E.MOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[12 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23775
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பான காயல் ஐக்கிய பேரவை, அனைத்து பள்ளிகளின் ஜமாத்துகள், நகர்மன்ற உறுப்பினர்கள், தலைவி, அனைத்து சமூக நல மன்றங்கள், அனைத்துலக காயல் நல மன்றங்கள், பொது நல அமைப்புகளுடன் நல விரும்பிகள் மற்றும் நகர செல்வந்தர்கள் அனைவர்களும் இந்த மோசமான கலாச்சார அழிவும்,பிரட்சனைகளையும் ஏற்படுத்தும் இத்திரபடத்தில் நமது காயல் மாநகர் கண்ணியமிக்க மக்களையும் அவர்களின் இஸ்லாத்தின் கலாசாரம் ஒழுக்கம் அமைதி போன்றவைகளை புண்படுத்த தயாராகிஉள்ள இந்த சூழ்ச்சியாளர்களை வருமுன் காப்போம் என்பார்களே அத்துடன் போர்க்கால அடிபடையில் உடனேயே மிக மிக ஒற்றுமையுடன் எந்த முன் பிழைகளை மனதில் இல்லாமல் அனைத்தும் குறைந்த பட்சம் இந்த ஒரு விசியத்திலாவது மறந்து விட்டுகொடுத்து சம்பந்த பட்ட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனே நிறுத்தி காயலின் அமைதி மற்றும் கலாசாரத்தை காப்பாற்றுங்கள்.
நமது நகரத்தை வெளி மக்கள்கள் அறிய நமது காயல் பிரபலமாக இது போன்ற குறுக்கு வழிகள் அறவே வேண்டாம் நமக்கு.
நமது நகரின் கன்னியவான்களும் முன்னோர்களும் கொடைவள்ளல்களும் தொழில் மற்றும் கல்வி என்று அனைத்து துறைகளிலும் சிறந்து பல சாதனைகள் மூலம் பிரபலம் பெற்றுவருகிரதே அதுவே போதுமானவை.
DCW பல சூழ்நிலைகளில் கழிவுகளை கடலில் கலந்தும் அதை கண்டுக்கொள்ளாத அரசு அதிகாரிகளையும் அவற்றால் தினம் அவதிப்பட்டு உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கும் நமது மக்களின் நிலைமைகளை இந்த தலைப்பில் இல்லாமல் அவர்கள் வேறு விதத்தில் வெளி உலக்குக்கு கொண்டுவர்வார்களா?
நம் ஊரின் பெயரில் படம் எடுப்பதை நாம் செய்திகளில் படிக்கும் போதே நமக்கு கடும் வெறுப்பாகவே இருக்கிறது. காரணம்.. நம் ஊரின் நற்பெயரை கலங்க படுத்தி விடாமல் நாம் யாவர்களும் ஒற்றுமையுடன் & நாம் உன்னிப்பாகவே கவனித்தும் வரவேணும்.
மேலும் நம் ஊரில் இந்த படத்திற்காக வேண்டி ....தேவைகற்ற சூட்டிங்க்கு எல்லாம் எடுக்க விடவே கூடாது. எதிலும் நாம் யாவர்களும் முழு கவனமாகவே இருக்கவேணும் .............கதையின் சாரம் கூட நம் ஊரின் நற்பெயருக்கு எந்த ஒரு கேடும் வராமல் நாம் உன்னிப்பாகவே கவனிக்கணும்.
...........இப்பட ஸ்டில்லில் வன்முறையை தூண்டும் விதமாக அல்லவா ....போஸ் கொடுத்து இருக்கிறார்கள் .... .நம் மதத்தையோ .....நம் ஊரின் பெருமையையோ இப்படம் கெடுக்காமல் எடுப்பதாக இருந்தால் ....நல்லது தான் ..... நம் ஊர் அனைத்து ஜமாத்துகளும் / அனைத்து அமைப்புகளும் இந்த படத்தின் கதை சாரத்தில் முழு கவனமாகவே இருக்கணும் ..
>>>>> நம் ஊர் மக்கள் இந்த படத்தின் விசையத்தில் ரொம்பவுமே விழிப்புணர்வுடன் இருக்கவேணும் .............ஆமா நம் ஊரில் தான் ஒரு சாராய கடை இல்லையே / ஒரு சினிமா தியேட்டர் இல்லையே / ஒரு போலீஸ் ஸ்டேசன் கூட இல்லையே ...அப்படி இருக்க ...எதற்கு இந்த படத்துக்கு ....நம் ஊரின் பெயர் .....
18. காயல் கலாச்சாரம் posted bySalai Sheikh Saleem (Dubai)[12 November 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23782
காயல் கலாச்சாரம் என்பது ஒரு கலப்படமில்லாத, தனித்தன்மையான, செழுமையான, இஸ்லாமிய நெறிகளுக்குட்பட்ட, சரித்திர சான்றுதல்கலுள்ள, வாழ்வியல் ஆதாரங்களோடு ஒத்துப்போகின்ற ஒரு பொக்கிஷம். இப்படிப்பட்ட ஒரு கலாசாரம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டிய ஓன்று அல்லாமல் தெருவில் கூறி இதை ஒரு வியாபாரப் பொருளாக்குவது என்பது எப்படி யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாதோ அப்படிதான் அவர்கள் நமது கலாச்சாரத்தை திரைப்படம் எடுப்பதையும் தடுக்க முடியாது >>> அது நம்மை சீண்டும் வரை >>> இந்திய துணைக்கண்டத்தில் இப்படி ஒரு செழுமை நிறைந்த கலாசாரம் எங்கும் கிடைக்காது.
ஆனால், இதையே ஒரு நகைப்பிற்க்குரியதாகவோ அல்லது ஒவ்வாதன்மையோடோ சித்தரிக்கப்பட்டால் (அல்லது படப்போவதாக கேள்விப்பட்டாலோ) தான் நமது நடவடிக்கைகள் தொடங்க வேண்டும்.
நான் MEGA உட்பட ஏனைய பொது நல அமைப்புகளுக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால்:
1 இப்படியான ஒரு படம் எடுக்கப்போவது உண்மைதானா?
2 படம் எடுப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பிறகு, வேற எந்த நடவடிக்கைகளிலும் இறங்காது, நேராக படம் எடுப்பவர்களை ஒரு குழுவாக சென்று சந்தித்து, கதை கேட்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டு, அவர்களுடனேயே பேச்சு வார்த்தை மூலம் நமது கலாசாரம் கேலிக்கூத்தாக சித்தரிக்கப்படாமல் இருக்க வழி வகுக்கலாம்.
இதை விட்டு விட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அடி தடியாக இறங்கினால் நமக்கு ஏமாற்றமும் அவமானமும்தான் மிச்சமாகும். கோர்ட்டு கேசு என்று போவது நமது கடைசி நடவடிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.
19. Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[12 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23787
அடடா ! இது என்ன புதுக் கதை...! புதுமையான கதை !! தினத்தந்தியில் விளம்பரம்!!! அதுவும் காயல்பட்டணம் என்ற பெயரில் திரைப்படம்.... அதுவும் விரைவில் படப்பிடிப்பாமே !
இந்த விஷயத்தில் காயல்பட்டினத்தார்கள் அனைவரும் , அன்பார்ந்த ஐக்கிய பேரவையும், பொதுநல அமைப்புகளும் உஷார் !!!மிக உஷார் !!!மிக மிக உஷார் !!!
யா அல்லாஹ்! எங்களது ஊர் பாரம்பரியம், கண்ணியம், ஒழுக்கம், மார்க்க பற்று இவைகளுக்கு எந்த விதமான பாதகமும் ஏற்படாதவாறு நீயே காப்பாற்றுவாயாக.
சிறு மக்கம் எனப்படும் எம் காயலின் கண்ணியத்திற்கு எவ்வித களங்கம் ஏற்படா தவாறு காப்பாற்றுவாயாக !!!ஆமீன் !!!
திரைப்படம் என்ற பெயரில் தேவையில்லாத, சர்ச்சைக்குரிய விஷயங்களை திரைப்படமாக்கி பிரச்சனைகளை உருவாகுதற்கு முன் நாம் கவனமாக இருப்பது அவசியம்.வெள்ளம் வரும் முன் அணைப் போட வேண்டும் ....வரும் முன் காப்பாற்றவேண்டும் .....
20. Re:... posted bysulaiman (abudhabi)[12 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23788
அஸ்ஸலாமு அழைக்கும்,
சினிமா என்றாலே அதில் பொய்,கற்பனை,வன்முறை ,ஆபாசம் இவைகள் இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் இதில் முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க முடியும் ,இவர்கள் எடுக்கபோகும் திரைப்படம் நல்லதாக இருக்குமோ, நம்மை சீண்டாமல் இருக்குமோ என்று நம்பிக்கை நாம் வைப்போமேயானால் அது அவ நம்பிக்கையாகவும்,பெருத்த ஏமாற்றமாகவும் தான் அமையும்,
தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்களின் பெயர்கள் ஒரு இனத்தையோ ,இனத்தின் தலைவரையோ குறிப்பதாக கூறி, அந்த இனத்தினர்களின் வீரியம் மிகுந்த எதிர்ப்பால் தான் அந்த பெயர்கள் மாற்றப்பட்டன.இது நமக்கு தெரிந்த வரலாறு. காயல்பட்டணம் என்றாலே தமிழகத்தின் பெரும் பலான மக்கள் அறிந்து வைத்து இருப்பது. இது முஸ்லிம்கள் பெரும் வாரியாக வாழ்கின்ற கண்ணியமும்,அமைதியும் இஸ்லாமிய கலாச்சாரத்துடன் மக்கள் வாழ்கிற ஊர் என்பதுதான். இந்த திரைபடத்தின் தலைப்பு காயல்பட்டினம் என்று தெளிவாக இருக்கிறது.இந்த படத்தில் எந்த கருவை மையமாக வைத்து கதை எடுத்தாலும்.இதை பார்பவர்களின் கண்முன்னால்,மன ஓட்டத்தில் நம்முடைய மக்களும்,நம்முடைய இஸ்லாமிய கலாச்சாரமும்தான் பிரதிபலிக்கும்.எனவே கதை கேட்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்ற கருத்தெல்லாம் நம்முடைய கையை வைத்து நம்முடைய கண்ணை குத்தகூடிய செயலாகவே இருக்கும்.
இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு சமூக தீமைக்கு ,இஸ்லாம் தடுத்துள்ள இந்த கேடுகெட்ட வியாபாரத்துக்கு, காலம்தொட்டு இஸ்லாமிய கலாச்சாரத்துடன் வாழ்ந்துவரும் நமது ஊரின் பெயரை வைத்ததற்கு முதலில் நாம் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். திரைப்படத்துக்கு காயல்பட்டணம் என்ற பெயரை மாற்றுவதுக்கான அனைத்து முயற்சிகளும் நாம் மேற்கொள்ளவேண்டும்.
21. Re:... உரிமை குரல் எழுப்புங்கள் posted byMahmood Naina (Dubai, UAE)[12 November 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23789
சினிமா இக்காலத்தில் ஒரு சமுதாய சீரழிவு. பல ஊறுகளின் பேரில் படங்கள் வந்தாலும், நம் ஊருக்கு என்று ஒரு தனித்துவம், மரியாதையை உள்ளது.
இது பெயர் குறித்த போராட்டம் இல்லை. நம் மூதாதயர்கள் வாழ்ந்த வாழ்கை, வரலாறு, ஒரு சமுதாயம் குறித்தது.
ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை கொச்சை படுத்தும் விதத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் இப்பெரி சூட்டியிருப்பது ஏதோ ஒரு சதியென்று ஏன் அறிவுக்கு புலப்படுகிறது.
இச்சமுஹத்தை சேர்ந்த அனைவரும் போராடவேண்டும் என்று தல்மயுடல் கேட்டுக்கொள்கிறேன். இதை அனுமதித்தல், பின் ஏதோ ஒரு தெரு பெயரில் எடுப்பார்கள்..... மனுக்களும், முரயிடுகாளும் குவியவேண்டும். இணையதளங்களில் ஒரு விழிப்புணர்வு பேஜ் ஒருவாக்கி, அதன் மூலமும் முறையிடலாம்.... பெஸ்ட் தயாரிப்பாளர் வீடு முன் போராட்டம்....
22. Re:...ஏழரை posted byOMER ANAS (DOHA QATAR.)[13 November 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 23796
காயல் பட்டினத்தின் சரித்திரம் காலாச்சாரம் தெரியாமல் ஏழரை எருமை மாட்டில் ஏறி உக்காந்து இப்பத்தானே யோசிக்கிறது. புரியும்போது துப்பாக்கிய பொட்டுன்னு போட்டுவிட்டுதானே போயிரும்!
அதையும் மீறி ஊருக்குள்ள பொட்டியோட வந்தா பார்ப்போமைய்யா!
கர்மாந்திரவம் புடிச்சவங்களை பற்றி இப்ப என்ன பேச்சு!
நாமலே உசுப்பி விட்டு சனியத்த எட்டு போட சொன்னா அது பத்து போட்டுக்கிட்டு இருக்கும்.
இப்ப இது நமக்குத் தேவையா?
படத்தை எங்கேயோ எடுத்து ரிலீஸ் பண்ண நினைக்கும் போது சேவுசன கூப்பிட்டு சின்னத்து எப்படி உடுறதுன்னு அப்ப பார்த்துக்கலாம்!
24. சினிமா காரம் posted byZainul Abdeen (DUBAI)[13 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23807
அடேங்கப்பா என்ன ஒரு குமுறல் ..என்ன ஒரு கண்டன கருத்து... நம்ம ஊரு கலாச்சாரமும் கண்ணியமும் எந்த ஒரு சினிமா மூலமும் கெட்டுவிடாமல் இருக்கவும், பெயர் விளம்பரம் பத்திரிகையில் வந்ததும் நம் ஊர் மக்களின் ஆதங்கத்தை இணையதள கருத்து பகுதி மூலம் பார்த்ததில் உள்ளம் பூரிப்படைகின்றது.
அதே சமயத்தில் நாம் அனைவரும் நம் உள்ளம்தொட்டு கேட்டு கொள்ளவேண்டியது ஒன்றுதான் , நாம் யாவரும் சினிமா மோகம் இல்லாமல்தான் இருக்கோமா???
இல்லை அந்த சினிமா நடிகர்கள் ஊருக்குளே வந்தால் அவர்களை சென்று பார்காமல்தான் இருக்கோமா??? நாம் நம்ம பாரம்பரியம், கலாச்சாரம் பற்றி பேசும் நம்மவர்கள், நம் பெண்கள் எந்த ஒரு கூச்சமும் இல்லாமல், வந்து இருக்கின்ற நடிகர்களுக்கு தொப்பி அணிவித்து நம்ம வீட்டு பிள்ளை போல் ரசிகின்றோம், நம்ம பட்சில குழந்தைகளை அவர்கள் கையில் கொடுத்து ஆனந்தம் அடைகிறோம். இதையெல்லாம் எங்கே கொண்டு போயி சொல்லுறது . . .
கண்ணியமும் கலாச்சாரமும் இன்னமும் நம்ம ஊரில் இருக்குதா எனபது சந்தேகம்தான்,.
எனினும் இதை இப்படியே விட்டு விட முடியாது. . . இதை தடுக்க நம்மளால் முடிந்ததை செய்து சாதிக்கவே வேண்டும்.
25. Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[13 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23816
சகோதரர் துபாய் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சில நடைமுறை உண்மைகளை இங்கு பதிவு செய்திருக்கிறார். மறுப்பதற்கில்லை..
ஆனால் இதுபோல் எத்தனையோ அடுக்கி கொண்டே போக முடியும். சினிமா தியேட்டார் இல்லை என்றால் வீட்டுக்கு வீடு டிவி இல்லையா, குறுந்தகடுகளை வைத்து சினிமா பார்க்கவில்லையா, சாராயக்கடை இல்லை என்றால் நமதூரில் சாராயம் குடித்து விட்டு அலைபவர்கள் இல்லையா, காவல் நிலையம் இல்லை என்றால் நம்மூரில் குற்றங்களே நடக்கவில்லையா, போலீஸ் அடிக்கடி வந்து ஆங்காங்கே நடக்கும் சண்டைகளை பதிவு செய்யவில்லையா, பலரை கைது செய்ய வில்லையா
இப்படியே கேட்டுக்கொண்டே போனால் துப்பாக்கி நீட்டி காயல்பட்டணம் படம் எடுப்பவனுக்கு சாமரம் வீசி வரவேற்பது போல் ஆகி விடும். அவனது துப்பாக்கிக்கு நாமே தோட்டா ரவை வாங்கி கொடுத்தது போல் ஆகி விடும். நமக்குள் ஆயிரம் இருக்கும் அதற்காக இன்னொருவன் உள்ளே வந்து நமதூரில் திரைப்படம் எடுக்க நாம் அனுமதிக்க முடியுமா. எனது வீட்டிலும் உங்கள் வீட்டிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் மனத்தாங்கல்கள் இருக்கும் அதற்காக வெளியே இருந்து வருபவன் நம்மை பார்த்து ஏளனம் செய்து பேச நாம் இடம் கொடுப்போமா... நீங்கள் படித்தவர்கள் பண்புள்ளவர்கள். நாலும் தெரிந்தவர்கள்..
"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி" என்று சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்த்து போராடிய தேச விடுதலை வீரர்கள் சொல்வார்கள்.
எனவே யாரும் காயல்பட்டணம் திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு சார்பான விஷயத்தை எழுதாமல், நமது ஊர் கண்ணியத்தை காப்பாற்ற ஒரு அணியில் திரண்டு நிற்கவேண்டும். கருத்து பதிவுகளை கொஞ்சம் DIPLOMACY யுடன், விவேகத்துடனும் பதிவு செய்யுமாறு நண்பர்களை கரம் பிடித்து வேண்டிக் கொள்கிறேன்.
27. சினிமாத்துறை சாயல் இமியளவும் எங்கள் ஊருக்குள் எட்டிப்பார்க்க அனுமதியோம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanpu)[13 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23831
நன்றி தினத்தந்தி நாளிதழுக்கு இச்செய்தி முன்னரே கிடைத்துள்ளதால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது!
நமது நகர்மன்ற தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்கள், அனைத்து ஜமாத்துக்கள், அனைத்து தன்னார்வு தெண்டு அமைப்புகள், அனைத்து சங்கங்கள், அகில உலக அனைத்து காயல் நல மன்றங்கள் அனைவர்களும் சேர்ந்து இவ்விஷியத்தில் ஒத்த கருத்தாக ஒரு நளினமான கடினமற்ற கருத்துடன் ஊர் மக்களின் ஒட்டுமொத்த உணர்வடிவம் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி,
நம்மில் நிதானமாகவும் நேர்த்தியாகவும் எக்காரியய்தையும் கையாளும் ஒரு சில பேர்களை ஒரு குழுவாக தேர்ந்த்டுத்து, அக்குழு இந்த தீர்மானத்தை எடுத்து சென்று அப்படத்தை (காயல்பட்டணம்)தயாரிப்பவரிடம் இதமாக விளக்கினால் புறிந்து கொள்வார்!
எள் அளவும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல்,
சீறிப்பாயும் பாம்பும் அடங்கப்பட வேண்டும் அதை அடக்கும் பெரம்பும் பிய்ந்திடாமல் பார்த்து கொள்ளப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தை சிந்தனையில் ஏற்றி செயல்பட வேண்டும்!
என்னதான் ஆபாசம், அடிதடி, அத்துமீறும் நாகரீகம் போன்ற காட்சியற்ற சராசரி படமென்று அவர் சொல்ல வந்தாலும்,
நம் புண்ணிய காயல்பூமியின் பழம்பெரும் பண்பாடு, கலாச்சாரம்,இறைபக்தி,இயல்பான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்தும் நிறைதுள்ள இறையான்மையானது மற்றைய ஊர்களிலிருந்தும், மற்றைய சமுதாய மக்களிடமிருந்தும் முற்றாக மாறுபட்டிருக்கிறோம் என்பதை விளக்க வேண்டும்! .
இவ் வாழ்க்கை முறையின் ஏதாவதொரு சம்பவ சாயல் இல்லாமல் இப்படத்தை இயக்க முடியாது,ஏனனில்
இப்படத்திற்கு "காயல்பட்டணம்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!
சினிமாத்துறை சாயல் இமியளவும் எங்கள் ஊருக்குள் எட்டிப்பார்த்தால், அதை எச்சந்தர்ப்பத்திலேயும் ஏற்றுகொள்ள முடியாத மரபுடைய மக்களாகத்தான் வாழ்ந்து வருகிறோம்!
எங்கள் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் மதித்து இந்த பெயர் தலைப்பை மாற்றிக்கொள்ளுங்கள் என்று எடுத்து சொன்னால் நிச்சயம் ஏற்றுகொள்வார்!
ஏனனில் அவர் ஒரு வியாபாரி தன் பொருளுக்கு எந்தவித் சேதம் இல்லாமல் விற்றால் தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற உண்மையையும் அவர் உணராதவர் அல்ல.
அதோடு நாம் அவருக்கு போட்டிவியாபரியாக வியாபாரம் செய்பவர்களும் அல்ல என்பதும் அவருக்கு தெரிந்த ஒன்றுதான்!
அகில உலக காயல் நல மன்றத்தின் நிர்வாகிகளே,
நம்மில் சில மன்றங்கள் ஊரிலுள்ள நலிந்த ஏழை எளியோருக்கு உதவ வேண்டுமென்ற உன்னத நோக்கத்தை நிறைவேற்றும்முகமாக நம்மால் இயன்ற பணஉதவியை மட்டும் செய்து விட்டு, பேசாமல் இருந்து விடுகிறோம்!
ஊரில் நடக்கும் நன்மை, தீமைகளையும் உண்ணிப்பாக கவனிப்பவர்களாகவும், உலகத்தில் எந்த மூலையில் வாழ்தாலும் எங்கள் உணர்வுகளை ஊர் மக்களோடு பகிர்ந்து கொள்வோம் என்ற எதார்த்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் இனிய நெஞ்சங்களாக இருக்க வேண்டுமாய் அன்பொழுகும் உள்ளதால் ஆதம் சுல்தான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!
உண்மையான உள்ளத்திலிருந்து துள்ளிவரும் உணர்சிகளை விலங்கிட எந்த சக்தியால்தான் முடியும்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்,
28. Re:... posted bySEYED ALI (KAYALPATNAM)[13 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23833
இப்போது சொறிந்து என்ன செய்ய?சினிமா நிழலை நிஜம் என்று நம்புவதும்,சினிமா நடிகர்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவதும்,ஒன்றுமே புரியாமல் இஷ்ட்டத்திர்க்கு,ஊளை இட்டு ஒப்பாரி வைப்பதை இனிமையான பாட்டு என்று பித்து பிடித்து ரசிப்பதும்,இந்த தமிழ்நாட்டில்தானே அரங்கேறுகிறது.
முஸ்லிம் முஸ்லிம் அல்லாதார் என்றில்லை,எல்லோருமே இந்த கேட்டில்தான் இங்கே உழன்று கொண்டிருக்கிறார்கள்.இனி என்ன,காயல்பட்டணம்,பிறகு விரைவில் கீழக்கரை,இன்னும் கொஞ்சம் ஆழமாக,பேயன்விளை,ரத்னாபுரி,இப்படிக்கூட சினிமா வரும்.முதலில்,நாம் விழித்து கொள்வோம்.
சினிமாவையும் அதை சேர்ந்தவர்களையும்,ஓரம் கட்டுவோம்.இந்த படம் எடுக்க படப்பிடிப்பு குழுவினர் இங்கு வருவதாக இருந்தால்,முன்கூட்டியே அதை தெரிந்து கொண்டு ஊர் எல்லையிலேயே மற்ற சமுதாயத்தினரையும் கூடிக்கொண்டு எதிர்க்க வேண்டும்.சென்னையில் இருக்கும் காயல் நல மன்றத்தின் மூலம் இவர்களை தொடர்பு கொண்டு,நம் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
29. நாமும் எடுக்கலாம் படம் posted byசொளுக்கு.M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[13 November 2012] IP: 203.*.*.* India | Comment Reference Number: 23834
என்னவென்றே தெரியாமல் ஆளாளுக்கு ஏதேதோ பேசுவதை விட நமக்கு சாதகமாக இதை பயன்படுத்திக்கொள்ளலாமே. இந்த படத்தின் டைரக்டரை நமதூரில் உள்ளவர்கள் நேரில் சந்தித்து DCW என்ற அரக்கனை மைய்யமாக வைத்து படத்தை எடுக்கச்சொல்லி அவர்களுக்கு ஒரு ஐடியா கொடுக்கலாமே.
அத்தோடு ஒரு சின்ன வேண்டுகோளையும் சொல்லி விட்டு வரலாம் அதாவது அப்படி இப்படின்னு ஏதாவது எங்க ஊரைப்பற்றியோ , எங்க சமுதாயத்தை பற்றியோ ஏதாவது படத்தில் சொன்னால் சைலண்டாக உங்க படம் பெட்டிக்கு உள்ளேயே ,முடங்கி நீங்கள் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்க வேண்டி இருக்கும் என்று நமக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கினை பற்றி ஒரு பிட்டு போட்டு காண்பித்து வரலாம்.
இதன் மூலம் அவர்களை தவறு செய்யாமல் பார்த்து கொள்ளலாம் மேலும் நமக்கு சாதகமாகவும் அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மீடியா ஒரு மாபெரும் சக்தி என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். கடல் தண்ணீர் கரித்தாலும் அதனை சுத்திகரித்து நமக்கு தேவையான நல்ல தண்ணீரக்க நாம் முயற்ச்சி செய்யலாம். தவறு இருந்தால் மன்னிக்கவும் என் மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவுதான்..
ஒரு வியாபாரி தன் பொருளுக்கு எந்தவித் சேதம் இல்லாமல் விற்றால் தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற உண்மையையும் அவர் உணராதவர் அல்ல. இது ஆதம் சுல்தான் அவர்களின் பதிவு...
ஹலாலான வியாபாரம் செய்வபருக்கு இது பொருந்தும்..
இது ஹராமான முறையில் இலாபம் ஈட்ட பிரச்சனைகளை பொது மக்கள் மத்தியில் கிளப்பி சர்ச்சைகளுக்கு உட்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுவதற்கே...! அப்படி அந்த படத்தில் என்ன வருகிறது...? என்ன இருக்கிறது...? என்று ஆர்வத்தை தூண்டி பிரச்சனைக்கு மத்தியில் வெளியான படம் என்று விளம்பரம் தேடவே இது... இந்த விளம்பரம் வழியை சினிமா காரர்கள் கையாளுவது சகஜமே...
இருந்தாலும் நமது எதிர்ப்பை மிக வீரியமாக பதிவு செய்வதை செய்ய தான் வேண்டும்...
31. Re:... posted bySULAIMAN N.T (YANBU)[13 November 2012] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23838
அன்பார்ந்த நமதூர் நலனில் அக்கறைகொண்ட சங்கங்கள் தொண்டு நிர்வனங்கள் அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நமதூரின் கண்ணியம் கட்டுப்பாடு இதுவரை காக்கப்பட்டு வந்தது போல் இறுதி வரை காக்க இதுபோன்ற சமுதாய சீரழிவை நம் ஊருக்குள் அனுமதிக்க கூடாது ஒன்று படுவோம் ------------- வெற்றிபெறுவோம்
32. அன்று ஒழுக்கத்தை விதைக்கும் பள்ளியில் சினிமா பட்டை நகரில் நுழைய விட்டோம்...! அதற்கே எதிர்ப்பு இல்லை...! என்று தெரிந்து இன்று நகரின் பெயரில் சினிமா படம் எடுக்க முன் வந்துள்ளார்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[14 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23841
இசுலாமியர்களே நிர்வாகம் செய்யும் பள்ளி ஆண்டுவிழாவில் சமீபத்தில் பட்டிமன்றம் என்ற பெயரில் அதில் கலாச்சார ஒழுக்க சீரழிவை ஊக்கவிக்கும் வகையில் சினிமா பாடல்கள்...! பள்ளி மேடையில் அரங்கேறியது. அக்கால பாடலா? இக்கால பாடலா ? என்ற தலைப்பில் ஆசிரிய பெருமக்கள் ஒரு அசிங்கத்தை நடத்தி முடித்தார்கள்... மேடைக்கு எதிரில் அந்த சினிமா பாடல்களுக்கு பெண்களும், ஆண்களும், மாணவ சிறுவர்களும் கரகோஷம் எழுப்பி கைதட்டி மாணவர்களை ஊக்குவித்தார்கள்...
கலாச்சார சீரழிவு நகரிலேயே விதைக்க ஆசிரிய பெருமக்கள் முற்படும்போது... நமது எதிர்ப்பை யாரும் காட்டுவது... அல்ல...
எவனோ ஒருவன் வெளியில் இருந்து நமது நகருக்கு சர்ச்சையை உண்டாக்கி படத்திற்கு விளம்பரம் தேடி பணம் சம்பாதிக்க படத்திற்கு "காயல்பட்டணம்" என்ற தலைப்பு வைக்க முற்படும்போது நாம் அதை எதிர்க்கிறோம்...
அன்று ஒழுக்கத்தை விதைக்கும் பள்ளியில் சினிமா பட்டை நகரில் நுழைய விட்டோம்...! அதற்கே எதிர்ப்பு இல்லை...! என்று தெரிந்து இன்று நகரின் பெயரில் சினிமா படம் எடுக்க முன் வந்துள்ளார்கள்...
முதலில் நகரில் உள்ளவர்களால் தூவப்படும் விஷ விதைகளை கிள்ளியெறிய படவேண்டும்... பிறகு வெளியில் இருந்து விஷ விதைகளை எவன் போடுகிறான் பார்க்கலாம்...!
(அட்மின் அவர்களுக்கு - வேண்டுகோள்...! தயவு செய்து இதை விவாதம் என்று கருதி இந்த கருத்தை உதுக்கி விட வேண்டாம்... நடந்த உண்மையை பகிர்ந்துள்ளேன் - பதிவு செய்துள்ளேன்..! வாய்ப்பளித்த இந்த இணையதளத்திற்கு நன்றி.. நன்றி...
33. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[14 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23842
எந்த கருதுக்கலவையைக் கூட கச்சிதமாக கையாளும், அறிவுக் கூர்மையான ஆயுதத்தை அனுபவ உறைக்குள் வைத்து "நட்புடன்" என்ற ஊர்தியில் ஊரில் உலா வரும் அன்புச் சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்களே,
நான் குறிப்பிட்ட வாசகத்தை மீண்டும் தருகிறேன்.
"ஒரு வியாபாரி தன் பொருளுக்கு எந்தவித் சேதம் இல்லாமல் விற்றால் தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற உண்மையையும் அவர் உணராதவர் அல்ல"
மேற்கண்ட இந்த வாசகத்தை 5 அல்லது 6 முறையாவது திரும்ப.திரும்ப படித்து பாருங்கள் அதில் உள்ள "பொடியை" புரிந்து கொள்வீர்கள்.!
34. Re:...Kayalpatnam posted byJaffer Sulaiman (Chennai)[14 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23850
The Film should be banned before it starts Our native should join as one hand and make secure for our culture and should not allow the things which has be banned by our Allah and Rasool
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross