காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
கடந்த சில நாட்களாக காயல்பட்டினத்தையொட்டிய கடற்பரப்பு செந்நிறமாகக் காட்சியளித்து வந்த நிலையில், நேற்று காலை வரை ஓரளவுக்கு நிறம் இயல்புக்கு மாறியிருந்தது. இந்நிலையில், (09.11.2012 வெள்ளிக்கிழமை மதியம் முதல் கடலின் மேற்பரப்பு மங்கிய செந்நிறத்துடன் காணப்பட்டது. 10.11.2012 அன்று மாலையில் செந்நிறம் சற்று அதிகரித்தது.
இன்று அதிகாலையில் நேற்றை விட செந்நிறம் அதிகமானது. காலை 11.45 மணியளவில் கடல் பரவலாக தெளிவான செந்நிறத்திற்கு மாறியதையடுத்து, நண்பகல் 12.30 மணியளவில் கழிவுநீர் கால்வாய் கடலில் கலக்குமிடத்திற்குச் சென்று பார்வையிடப்பட்டது.
அங்கு, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து வழிந்தோடும் கழிவுநீர் கால்வாய் கடலில் கலக்கிக்கொண்டிருந்தது. அது கடலில் கலக்குமிடம் கட்டியான சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.
கடல் நீரோட்டம் தென்திசை நோக்கியே இருக்கும் என்பதால் கால்வாயின் (புன்னைக்காயல் அமைந்துள்ள) வடபகுதியில் சிறிதளவு கூட நிறம் மாறவில்லை. அதே நேரத்தில், சரியாக கால்வாய் கலக்குமிடத்திலிருந்து கடலின் வடபகுதியில் - காயல்பட்டினம் கடற்பரப்பின் கிழக்குப் பகுதி தொட்டு தென்பகுதி வரை செந்நிறம் பரவிக் காணப்பட்டது.
கடலின் - நவம்பர் 11ஆம் தேதி (இன்று) காலை கடல் காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக! |