காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
கடந்த சில நாட்களாக காயல்பட்டினத்தையொட்டிய கடற்பரப்பு செந்நிறமாகக் காட்சியளித்து வந்த நிலையில், நேற்று காலை வரை ஓரளவுக்கு நிறம் இயல்புக்கு மாறியிருந்தது. இந்நிலையில், (09.11.2012 வெள்ளிக்கிழமை மதியம் முதல் கடலின் மேற்பரப்பு மங்கிய செந்நிறமாக மாறத் துவங்கி, படிப்படியாக அதிகரித்து, 11.10.2012 அன்று தெளிவான செந்நிறத்திற்கு மாறியது.
12.11.2012, 13.11.2012 தேதிகளிலும், இன்றும் கடலின் மேற்பரப்பு செந்நிறமாகவே உள்ளது. இன்று காலை 08.00 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
கடலின் - நவம்பர் 11ஆம் தேதியன்று, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தென்கிழக்கே ஓடும் கழிவுநீர் கால்வாய் கடலில் கலக்கும் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
கள உதவி:
S.அப்துல் வாஹித் |