அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளையின் முன்னாள் அவைத்தலைவரும், நடப்பு நிர்வாகிகளுள் ஒருவருமான எம்.எஸ்.எம்.ஷாஃபீ 09.11.2012 அன்று (நேற்று) நண்பகல் 12.30 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, நேற்றிரவு 08.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவையொட்டி, நகர அதிமுக சார்பில் பின்வருமாறு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம் அ.இ.அண்ணா தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடியும், நகர கழக முன்னாள் அவைத் தலைவரும், திருச்செந்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இன்னாள் செயலாளருமாகிய ஜனாப் எம்.எஸ்.எம்.ஷாஃபி அவர்கள் 09.11.2012 பகல் 12.30 மணியளவில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். (இன்னாலில்லாஹி...)
அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு நகர அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |