காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. 09.11.2012 வெள்ளிக்கிழமையன்று (இன்று) நள்ளிரவில் இதமான மழை பெய்துள்ளது.
நேற்றும் இதேபோன்று நள்ளிரவில் இதமான மழை பெய்தது. இம்மழையையடுத்து, இன்று காலையில் வெளிவந்த நாளிதழ்களில், தூத்துக்குடி மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில்தான் அதிகளவில் - அதாவது 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தளவுக்கு மழை பெய்ததாக அறிய முடியவில்லை. இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி வருமாறு:-
மழையை அளக்கும் கருவி - சுற்றுப்புறத்தில் கட்டிடங்களோ - மரங்களோ இல்லாத வனாந்தரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போததான் மழை பொழிவின் சரியான அளவீட்டைப் பெற்றிட இயலும்.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போதும், நடப்பு வடகிழக்குப் பருவமழையின்போதும் காயல்பட்டினத்தில் அதிகளவு மழை பெய்துள்ளதாக நாளிதழ்களில் அடிக்கடி வெளியிடப்பட்டது. இது, காயல்பட்டினத்திலுள்ள மழை அளக்கும் கருவி அரசு விதிப்படி சரியான முறையில் அமையப்பெற்றுள்ளதா என்பதை ஆய்ந்தறிய வேண்டியதை உணர்த்துவதாக உள்ளது. |